தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

புதன், 27 ஆகஸ்ட், 2014

கோவை மாவட்டம் திருப்பூர் பல்லடம் பகுதியில் EOI க்களுக்கான கடந்த மே மாத சம்பளம் வராமல் இருந்தது நமது மாவட்ட                                                     ச12ங்கத்தின் முயர்ச்சியாலும்  SDE (OP) அவர்களின் தலையீட்டாலும் இன்று (27/08/2014)  கிடைத்தது..........
15 பேர்களின் சம்பளம் கோவையில் திரு SDE(OP) அவர்களின் முன்னிலையில் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டது. நமது மாவட்ட செயலருக்கும் திரு LEO அவர்களுக்கும் நன்றி !!!!












வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தொழிற்சங்க ஒற்றுமையை சீர்குலைக்கும் பிஎஸ்என்எல் நிர்வாகம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



கோவை தலைமை தொலைபேசி நிலையம்
கோவை, ஆக. 7- தொழிற்சங்க ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்களின் கூட்டுக்கமிட்டி சார்பில்கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கடந்த ஜூலை மாதம்டெல்லியில் கூட்டுக்கமிட்டியுடன் நிர்வாகம்நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, அதன்குறிப்பேட்டில் தொழிற்சங்க ஒற்றுமையை குலைக்கிற வகையிலும், கூட்டுக்கமிட்டியின் செயல்முறையை தவறுதலாக விமர்சித்து எழுதப்பட்டிருப்பதை கண்டித்தும் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தலைமை தொலைபேசி நிலையம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டுக்கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டியின் மாநில நிர்வாகி சுப்புராயன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர்சங்கத்தின் மாநிலத்தலைவர் மாரிமுத்து, மாவட்டசெயலாளர் சி.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதிய தேக்கம், ஊதிய குறைப்பு பிரச்சனை,கருணை அடிப்படையிலான பணி நியமனம் மற்றும் தொழிற்சங்க ஒற்றுமையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
கோவை சாய்பாபாகாலனி தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டிஇ கிளைச்செயலாளர் ஆர்.பேரின்பராஜ் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர்கள் கிளை செயலாளர் என்.அன்பழகன் தொடங்கிவைத்தார். பிஎஸ்என்எல்இயு மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன்,என்எப்டிஇ மாவட்டச்செயலாளர் என்.ராமகிருஷ்ணன், பிஎஸ்என்எல்இயு. மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இறுதியில் பிஎஸ்என்எல்இயு கிளை பொருளாளர் வி.கருணாகரன் நன்றி கூறினார். இதில் ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குன்னூர்
ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து பிஎஸ்என்எல், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குன்னூர் மார்கெட்டிங் எஸ்.டி.இ யின் தன்னிச்சையான போக்கினை கண்டித்தும், எஸ்.ஏ.ஸ் யில் ஒப்பந்த ஊழியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்’. இரு மாதங்களுக்கொருமுறை ஜேசிஎம் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் ஜேக்கப் மேரிஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சதாசிவம், மாநில உதவி செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட காட்சிகள் திருப்பூரில்





































140 ஒப்பந்த தொழிலாளர் பணிநீக்கத்தை கண்டித்து திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.5-வேலூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 140 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தியும் திருப்பூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் இணைந்து மாநில அளவில் நடத்திய இயக்கத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை திருப்பூர் பி.பி.புதூர் தொலைபேசி நிலையம் முன்பாக இந்தஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க தலைவர் சாமியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் முகமதுஜாபர், கிளைச் செயலாளர் அண்ணாதுரை, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரமேஷ்ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப்பொருளாளர் விஸ்வநாதன் நிறைவுரை ஆற்றினார்.

சனி, 2 ஆகஸ்ட், 2014

பத்திரிக்கை செய்தி

தினமலர்

தினகரன்

தீக்கதிர் செய்தி

ஒப்பந்த தொழிலாளர் சம்பள பாக்கி வழங்கிட கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கு ஊதி, பாடை கட்டி போராட்டம் 

திருப்பூர், ஆக.2 -திருப்பூர் தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இரு மாதங்களாக பிஎஸ்என்எல் நிர்வாகம் நிறுத்திவைத்திருக்கும் சம்பளத்தை உடனடியாகவழங்கக் கோரி சங்கு ஊதி,பாடை கட்டி போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக சனியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க திருப்பூர் கிளைத் தலைவர் வாலீசன், தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்க கிளைச் செயலாளர்ரமேஷ் ஆகியோர்தலைமை தாங்கினர். இதில் தொலைத் தொடர்புத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப்பிடித்தம் செய்து முறையாக கணக்கு வைக்க வேண்டும், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை காலதாமதம் செய்யாமல் விரைவாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்சங்க மாநிலத் துணைச்செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் கே.விஸ்வநாதன், மாநிலத் துணைச் செயலாளர் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். முன்னதாக பாடைகட்டி அதில் உருவபொம்மை வைத்து, சங்குஊதி ஈமச்சடங்கு செய்வது போல் நூதனபோராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் பகுதியில்  இரண்டு ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு , மே மற்றும் ஜீன் மாத சம்பளங்கள்  வழங்கப்படவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தையும்  அதில் எவ்வித  முன்னேற்றமில்லை  . பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்துடன் இணைந்து  பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எனவே 21-07-2014 அன்று கருப்புப்பட்டை  அணிந்தும், 25-07-2014 அன்று  ஆர்ப்பாட்டம் நடத்தியும்  மேலும் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தியும்  நம் எதிர்ப்பை தெரிவித்தோம். இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தின் முன் சங்கு ஊதி பாடை தூக்கும் போராட்டம் நடைபெற்றது அதன் புகைப்பட காட்சிகள்