தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

வியாழன், 25 ஜூலை, 2013

தீக்கதிர் செய்தி,ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக







மே.பாளையம், ஜூலை 24-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட 5 வது மாநாடு மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது, இம்மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார், மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் எம்.பி.வடிவேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். முன்னதாக, தேசியக் கொடியை டி.ஆர்.ராசப்பன் மற்றும் சங்க கொடியை எஸ்.சண்முகசுந்தரமும் ஏற்றி வைத்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் சம்பத் தலைமையில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாநாட்டை துவக்கி வைத்தும், சுந்தரக்கண்ணன் என்பவரால் வடிவமைக்கப்பட்டிருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான கோவை மாவட்ட இணையதளத்தை (http://tntcwucbt.blogspot.in) துவக்கி வைத்தும் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.முருகையா உரையாற்றினார்.இம்மாநாட்டை வாழ்த்தி மாநில பொருளாளர் கே.விஸ்வநாதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜே.ராஜாமணி, சுந்தரக்கண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்ரமணியம், மாநில அமைப்பு செயலாளர் ஏ.முகமது ஜாபர் ஆகியோர் பேசினர்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் தாலுகா செயலாளர் சி.பெருமாள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில், தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக எம்.முத்துக்குமார், செயலாளராக டி.ரவிச்சந்திரன், பொருளாளராக கே.கருப்புசாமி மற்றும் 19 பேர்களை கொண்ட புதிய நிர்வாக கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. இம்மாநாட்டில், 400க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.




கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள்


கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள்
தலைவர்                :  தோழர் M.முத்துக்குமார் திருப்பூர்
துணை தலைவர் :  தோழர் S.சண்முக சுந்தரம் பல்லடம்
                                      தோழர் K.J.ராஜாமணி கோவை
                                        தோழர் தர்மராஜ் பி பி புதூர்
                                         தோழர் O.ராமச்சந்திரன் பொள்ளாச்சி

செயலர்                   :  தோழர் T.ரவிச்சந்திரன் கோவை

 உதவி செயலர்   :   தோழர் C.ராஜேந்திரன்
                                        தோழர் M.P.வடிவேல் மேட்டுப்பாளயம்
                                          தோழர் P.விஜயன் உடுமலை
                                         தோழர் N.குமரேசன் கோவை

பொருளாளர்       :    தோழர் K.கருப்புசாமி கோவை 
துணை பொருளர்    தோழர் செந்தில் குமார் கோவை

அமைப்பு செயலர்    :  தோழர் C.சம்பத் பீளமேடு
                                                 தோழர் R.குப்புசாமி கணபதி

                                          தோழர் A.ரமேஷ் திருப்பூர்
                                              தோழர் ஷோபனா கோவை
                                              தோழர் அஸ்வின் ராஜா
                                               தோழர் V.பழனிச்சாமி
                                               தோழர் கல்யாணி கோவை

தணிக்கையாளர்         தோழர் R.R.மணி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக