TNTCWU
தோழர்களே/
TNTCWU வின் மாநிலப் பொதுசெயலராக பொறுப்பேற்றவுடன் முதன் முறையாக கோவைக்கு வருகைதந்த தோழர். வினோத் அவர்களுக்கு 07-10-2013 அன்று மதியம் கோவை CTO வில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. தோழியர் ராஜாமணி தலைமை தாங்கினார். TNTCWU மாவட்டச்செயலர்தோழர் .ரவிச்சந்திரன் வரவேற்புரை நல்கினார். BSNLEU வின் மாவட்டத்தலைவர் தோழர் KC ,
மாவட்டசெயலர் தோழர் CR , மாநில துணைத்தலைவர் தோழர். வெங்கடராமன் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.தோழர் வினோத் தனது சிறப்புரையில் நாகர்கோயில் மாநாட்டுதீர்மானங்களை விளக்கிப் பேசினார். இன்றைய அரசியல் நிலைமைகளை விளக்கியஅவர் ஸ்தாபனத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.போராட்டம் ஒன்றே நமது பிரச்னைகளை தீர்க்கும் , அதே சமயம் BSNL ஐ காக்க வேண்டியஅவசியத்தையும் எடுத்துரைத்தார். United
forum மற்றும் Joint
forum நடத்திய போராட்டங்களில் TNTCWU
வும் பங்கேற்றதை பெருமையோடு நினைவு கூர்ந்தார். ESI,
PF ஆகிய பிரச்னைகளில் சங்கம்எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்தார். தோழர். முருகையா போன்ற தோழர்களின்வழிகாட்டுதலோடு தனது பயணம் சிறப்பாக தொடரும் என முடித்தார். தோழர் .கருப்புசாமிமாவட்ட பொருளர் நன்றி கூறி முடித்து வைத்தார். சுமார் 75 தோழர்கள் கலந்து கொண்டனர்.. TNTCWU மாவட்டச் சங்கம் சார்பாக தோழர் .ரவிச்சந்திரனும், BSNLEU வின் மாவட்ட ச்சங்கத்தின்சார்பாக தோழர் KC யும் சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். மொத்தத்தில் முதல் கூட்டமே முத்தாய்ப்பாக
அமைந்த்து தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.அதே போல் திருப்பூரில் மாலையில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் TNTCWU
வின் மாநிலப் பொதுசெயலர் தோழர்.சி.வினோத், TNTCWU வின் மாநிலப்பொருளாளர்.தோழர்.கே.விஸ்வநாதன், BSNLEU மாநில உதவிச்செயலர். தோழர்.எஸ்.சுப்பிரமணியம், BSNLEU மாநில அமைப்புச்செயலர். தோழர். முகமது ஜாபர். மற்றும் TNTCWUமாவட்டச்செயலர்தோழர் .ரவிச்சந்திரன், TNTCWU மாவட்ட தலைவர் தோழர் முத்துக்குமார் மாநிலஉதவி செயலர் தோழர் I.S.சுந்தரக்கண்ணன்ஆகியோர் பங்கேற்று சிறப்புரைவழங்கினார்கள்.