தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

வியாழன், 22 ஜனவரி, 2015

22.01.15 மாநிலந் தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...
மதுரை

 

22.01.15 மாநிலந் தழுவிய கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...

 
அருமைத் தோழர்களே ! BSNLEU & TNTCWU இரண்டு மாநில சங்கங்கள் சார்பாக எதிர்வரும் 22.01.2015 வியாழன் அன்று தமிழ்  மாநிலந்தழுவிய அளவில்  கண்ணைக்கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திட  அறை கூவல் கொடுக்கப் பட்டுள்ளது.ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக குறித்த    காலத்தில்  சம்பளம் வழங்காததை கண்டித்து நடத்த வேண்டும்.

நமது BSNLEU & TNTCWU இரண்டு சங்கங்கள் சார்பாக மதுரை SSAயில் வாய்ப்பு உள்ள இடங்களில் சக்தியாக ஆர்பாட்டத்தை நடத்திட வேண்டுகிறோம். மதுரையில் 22.01.2015 மதியம் 1 மணிக்கு தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
--- போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் & என். சோணைமுத்து . மாநில சங்கம் விடுத்த அறைகூவலுக்கு இணங்க விழுப்புரத்தில் நடைபெற்ற கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்


புதன், 14 ஜனவரி, 2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சிப் பொங்கல் பொங்கட்டும்!
ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து

சென்னை, ஜன. 14-
அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும், கொண்டாடி குதூகலிக்கும் இந்த நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது.உழுபவன் கையில் நிலம் இருக்க வேண்டும்; இருக்கும் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். உலகத்தார் அனைவருக்கும் உணவளிக்கும் உழவன் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு உரிமையுள்ளவராய் இருக்க வேண்டும். உணவளிக்கும் தொழில் கட்டுபடியானதாய், மகிழ்ச்சி தரத்தக்கதாய் அமைவதற்கு விதையும் உரமும் மருந்தும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.
நதியும் குளமும் கிணறும் பராமரிக்கப்பட்டு பாசன வசதிகள் மேம்பட்டதாய் இருக்க வேண்டும். நதிநீரில் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். அதன் மூலம் உணவளிக்கும் இத்தொழிலை உயிரினும் மேலாய் கொண்டாட வேண்டும் என்கிற உன்னதமான நிலை விவசாயிகளுக்கு வாய்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது; வாழ்த்துகிறது;
அதற்காக போராடுகிறது;ஆனால், விவசாயிகளைக் கொண்டாடவேண்டிய மத்திய-மாநில அரசுகள் அவர்க ளைத் திண்டாட வைக்கும் கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றன. அந்நிய-இந்தியபெரு நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை விவசாயிகளின் சம்மதமின்றி பறிப்பதற்கான சட்டம், மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக நஞ்சை நிலங்களை கபளீகரம் செய்யும் முயற்சி, உரங்களுக்கான மானிய வெட்டு, சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக கரும்பின் ஆதார விலையை உயர்த்த மறுப்பது, நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகையை மாநில அரசு அளிக்க முன்வந்தாலும் அதை ஏற்கமாட்டோம் என்று கூறுகிற மத்திய அரசின் நடவடிக்கை ஆகியவை விவசாயிகளை விவசாயத்தை விட்டு வேறு தொழிலை நோக்கி ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் சுரண்டப்படுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு விளைநிலங்கள் நீருக்கு ஏங்கி நிற்கும் நிலை தொடர்கிறது.இவற்றையெல்லாம் எதிர்த்து, விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது.
விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு கூடுதல் வீரியத்தோடும் வேகத்தோடும் போராடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழவர் திருநாளில் உறுதி பூணுகிறது. அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கட்டும் என்று வாழ்த்துகிறது. இந்த மகிழ்ச்சிக்கு தடைகளாய் நிற்கும் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களும் வெற்றிகளும் பொங்கட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது.
அள்ளிக் குவித்த குப்பையும் அகற்ற வேண்டிய குப்பைகளும்...!பொங்கல் விழா என்றாலே அதற்கு அடையாளமாக வீடுகளில் காப்புக்கட்டுதல் நடைபெறும். பொதுவாக தமிழ்நாட்டில் விழாக்கோலம் என்பதன் அடையாளமாக மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்படும். கோவில் விழாக்கள் என்றால் வேப்பிலையும் அலங்கரிக்கும் அல்லவா? அதன் ஒரு பகுதிதான் இந்த காப்புக்கட்டுதல். ஆனால் இது அடுத்த ஆண்டு பொங்கல்வரை வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் என்பது தான் அதன் முக்கியத்துவத்தை குறிக்கும்.வீடுமட்டுமல்ல, அதன் தொடர்புடைய அனைத்திலும் இந்த காப்புக் கட்டப்படும், அசையும் சொத்து, அசையாச்சொத்து என எல்லாம் அடங்கும். கோவிலில், சமாதியில், வயல்வெளியில், கடைசியாக குப்பைக்குழியிலும் தங்களின் உரிமைக்குரியது என்பதைப் பறைசாற்றும் விதத்தில் `காப்பு’ வைக்கப்படும். மற்ற எல்லா இடங்களிலும் வைப்பது சரி. குப்பைக் குழியிலேயுமா? ஆம்.கிராமங்களில் குப்பைக் குழி என்பது விவசாயிக்கு உரக்கிடங்கு. வீட்டின் கழிவுப் பொருட்களை கூட்டி அள்ளி குப்பைக் குழியில் போடுவார்கள். ஆனால் மாடு, கன்றுகளின் சாணியை மூத்திரக் கசிவோடும் கழிவான வைக்கோல் கூளத்துடனும் சேர்த்து கூட்டிப் பெருக்கி கூடையில் அள்ளிக் கொண்டுபோய் குப்பையில் கொட்டுவார்கள்.குப்பைக் குழியின் அளவு-அகல நீள ஆழம் (உயர) - வீட்டில் இருக்கும் கால்நடைகளின்-ஆடுமாடுகளின்-எண்ணிக்கையைப் பொறுத்து பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கும். இந்தக் குப்பைகள் ஏறத்தாழ ஓராண்டு காலம் அந்தக் குழியில் கிடந்து மக்கி தொழு உரமாகும். மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர், சாணியுடன் கூடிய மூத்திரநீர் எல்லாம் வைக்கோல் கூளாங்கள், சாணி, இதர குப்பைகளை ஊற வைத்து காயவைத்து நொதிக்க வைத்து மக்கிய உரமாக்கி விடும்.இந்த உரக்கிடங்கு தான் உழவுத் தொழிலுக்கு- வேளாண்மைக்கு மூல ஆதாரமாகும். இந்த உரத்தை தைமாத அறுவடை முடிந்ததும் கொஞ்ச காலம் ஓய்வெடுத்துக் கொண்டு மாசி, பங்குனியில் வயல்களுக்கு குப்பையை மாட்டு வண்டி மூலம் அள்ளிச் சென்று கொட்டுவார்கள். பின்னர் வயல் முழுவதும் பரவலாகச் சிதறிவிட்டு கோடை மழை பெய்த பின்னர் சித்திரை மாதம் அடையாளப்பூர்வமாக உழுவார்கள். பின், வைகாசி, ஆனியில் உழவுப்பணியில் ஈடுபட்டு விதை பாவுவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதைப்பது ஒரு போக சாகுபடி, புன்செய் சாகுபடிக்கும் பொருந்துவதாக அமையும்.விவசாயப் பெருங்குடி மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருவதற்கு சணல், சாக்குப் பைகளை, பிறகு துணிப்பைகளை பயன்படுத்தினர். இன்றும் கூடப் பயன்படுத்துகின்றனர்; ஆனால், எண்ணிக்கை குறைவாக. இப்போது எல்லாம் `கேரி பை’-தான் பொருட்கள் வாங்கி வரப் பயன்படுகிறது. ஆங்கில `கேரி பேக்’ தமிழில் கேரி பை ஆகிவிட்டது. மஞ்சள் பை கொண்டு போகிறவர்களை கிராமத்தான் என்று நகரத்தவர் கேலி செய்தது போய், இப்போது கிராமத்து மக்களே ஒரு மாதிரியாக பார்க்கிற காலம் வந்துவிட்டது.“நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்-பாழும்நாகரிகம் ஓடிவந்து கெடுக்கும்“ என்ற நாட்டுப்புறப்பாடல் கனகச்சிதமாகப் பொருந்துகிறது.பலசரக்குக் கடையில் காகிதப் பையில் பொட்டலம் மடித்துத் தருவதில்லை. பூக்கடையில் இலையில் பூ கட்டி தருவதில்லை. ஓட்டல்களில் `பார்சல்’ பிளாஸ்டிக் கேரி பைகளில், டீக்கடைகளில் கண்ணாடி டம்ளர்கள் காண்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. கறிக்கடையில் இலையில் கட்டிக் கொடுத்தவர்கள் இப்போது கேரி பையிலேயே தருகிறார்கள். மிட்டாய்கள், தின்பண்டங்கள் எல்லாம் வண்ணத் தாள்களில்-பிளாஸ்டிக்கில்தான்- அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக குளிர் பானங்கள் தான் உச்சத்தில் உள்ளன. இந்தச் சூழலில் சிக்கியிருப்பவர்கள் எப்படி மீள்வது...?நவீனம் என்பது சிந்தனையில் இருக்க வேண்டும். அது நம்மை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். சிக்கலையும் சிரமத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஆனால் நாம் தெரிந்தே இந்த வழியில் பயணிக்கிறோம். அதிலிருந்து பின் வாங்கத் தயங்குகிறோம் என்பது மட்டுமல்ல, தயாராகவும் இல்லை என்றே தெரிகிறது.கிராமங்களின் நிலை இதுவென்றால் நகரங்களின் நிலையைச் சொல்லவா வேண்டும்? சுவர்களில் ஒட்டப்படும் காகிதப் போஸ்டர்கள் போய் பிளக்ஸ், பேனர்கள்... “எங்கெங்கு காணினும் சக்தியடா- ஏழுகடல் அவள் வண்ணமடா” என்றார் பாரதிதாசன். இங்கோ ஏழுகடல் கரையும் கூட பிளாஸ்டிக் குப்பைகளால் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கிறது. நகரங்களின் தெருக்களில் சேரும் குப்பைகளை கொண்டுபோய்க் கொட்டுவதற்கு கம்போஸ்ட் உரக்கிடங்கு அதாவது குப்பைக் கிடங்கு இருந்தது. அங்கு மக்கிய மற்றும் சாக்கடைக் கழிவுகள் சேர்ந்த குப்பைகளை விவசாயிகள் அள்ளிச் செல்ல அனுமதிக்கப்படுவர். சேர்கிற குப்பை காலியாகவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போதோ தெருக்கோடியில் சில குப்பைத் தொட்டிகளை வைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துப் போடச் சொல்கிறார்கள். பின் அதை வண்டிகளில் எடுத்துச் செல்கிறார்கள்.மறு சுழற்சிக்கு பயன்படும் கழிவுப் பொருட்களை பிரித்து எடுத்தல் முக்கியமானது. தனிநபர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதில் பெரும் பங்கு வகிக்க முடியும். ஆனால் இப்போது அரசு டாஸ்மாக் கடைகள் பிளாஸ்டிக் குப்பைகள் குவிய முக்கியமான மையங்களாகி விடுகின்றன. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களும் பிளாஸ்டிக் குப்பைக் காடாகி வருகின்றன. இதனால் வயல்களில் பிளாஸ்டிக் குப்பைகள் சேருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இவற்றால் மண்ணின் தன்மை மாறி மலடாகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை மட்டுமின்றி நீரின் தன்மையும் மாறிக் கொண்டிருக்கிறது. நெல் மற்றும் இதர தானியங்கள் பிறவேளாண் விளைபொருட்களில் எல்லாம் பூச்சிக் கொல்லி நச்சு கலந்து விட்டது. இதை உண்பதால் தாய்ப்பாலில் கூட நச்சுத்தன்மை ஏறிவிட்டது என்று ஆய்வக நிபுணர்கள் ஆதாரப் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.நாகரிக உலகம் என்று சொல்லப்பட்டாலும் தூய்மையான நகரம், கிராமம் என்று சொல்ல முடியாத நிலையே உள்ளது. சாக்கடை வாய்க்கால்கள், திறந்த வெளிக் கழிப்பிடங்கள் எல்லாம் எங்கணும் பரவியிருக்கும் நம் இந்திய தேசத்தில் திடீரென ஒரு நாள் கையில் துடைப்பத்துடன் தோன்றி `தூய்மை இந்தியா’ வைப் படைப்போம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் நாட்டின் பிரதமர்.வாழும் முறையை மேம்படுத்தாமல் வாழ்நிலையை சீர்படுத்தாமல் அதற்கென திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்காமல்- திட்டக்குழுவை கலைப்பவர்களால் ஒரே நாளில் போஸ் கொடுப்பதால் `தூய்மை பாரதம்‘ அவர்களால் ஏற்படுத்த முடியாது. மோடி தில்லியில் போஸ் கொடுத்தால் பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் போஸ் தருகிறார்.இதனால் மட்டும் நிலைமை மாறிவிடுமா என்ன? இவர்களது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது ஒரு திரைப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.“தெருத்தெருவாய்க் கூட்டுவது பொதுநலத் தொண்டு - ஊரார்தெரிந்து கொள்ளப் படம்பிடித்தால் சுயநலம் உண்டு”ஆளுக்கொரு வீடு, வீட்டுக்கொரு கழிப்பறை, தேவைக்கு ஏற்ப சுகாதார தொழிலாளர், சாக்கடைகளையும் மலக்குழிகளையும் எந்திரங்கள் சுத்தம் செய்தல் என்ற நிலை ஏற்படும்போது தான் மக்கள் ஆரோக்கிய வாழ்வு பெறுவர். குப்பைக் கூளங்கள் தானே என்று அலட்சியப்படுத்தாமல் குப்பைகள் மேலாண்மையை திறம்படச் செய்திட வேண்டும். சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்ற பாரதியின் வாக்கை முன்னெடுத்து வரும் சந்ததியரைக் காப்போம்.- ப.முருகன்


செவ்வாய், 13 ஜனவரி, 2015

சிம் கார்டு பற்றாக்குறை; ஒப்பந்த ஊழியருக்கு சம்பளம் இல்லை பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,

அலைபேசி சேவைக்கு வழங்கும் சிம்கார்டு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் மொபைல் சேவை வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையின்றி சிம் கார்டு வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் துணை நிறுவனம் உருவாக்கத்தை கைவிட வேண்டும். 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் துவங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் உள்ளிட்டவைகளின் சார்பில் செவ்வாயன்று பல்வேறு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருப்பூரில் பிஎஸ்என்எல் தலைமை தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் சங்க கிளைச் செயலாளர் ஜோதீஸ், ஒப்பந்த ஊழியர் சங்க செயலாளர் ரமேஷ், மாநிலப் பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம் உள்பட பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

கோவை

கோவை சாய்பாபா காலனி தொலைப்பேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க கிளைத் தலைவர் பத்மாவதி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் என்.அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் கே.சந்திசேகரன் சிறப்புறையாற்றினார். நிறைவாக, காந்திபார்க் கிளை தலைவர் சுந்தரராஜன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகவேல் மற்றும் அய்யாவு ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.பரமேஸ்வரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை விரோத கொள்கைகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.


மத்திய அரசைக் கண்டித்து நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்


நாகர்கோவில், ஜன.13-தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சிம் கார்டுகள் தட்டுபாட்டைக் கண்டித்துபிஎஸ்என்எல் ஊழியர்கள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் பிஎஸ் என்எல் நிறுவனத்தில் சிம் கார்டுகள் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் காணப்படுவதால் வாடிக்கை யாளர்களுக்கு சிரமம் ஏற் பட்டுள்ளது. தற்போது சுமார் 8 லட்சம் சிம்கார்டுகள் தேவைப்படும் நிலையில் ஒரு லட்சம் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மத்திய- மாநில அரசு நிர்வாகங்களிடம் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின்மத்திய, மாநில நிர்வாகிகள்வலியுறுத்திய பிறகும் தேவையான சிம் கார்டு கள் வழங்கப்படவில்லை.இந்நிலையில் சிம் கார்டுகள் வழங்கப் படாததைக் கண்டித்தும், நிர்வாகம் உடனடியாக சிம்கார்டுகள் வழங்கக்கோரி யும், பிஎஸ்என்எல் நிறுவ னத்தை நலிவடையச் செய்து தனியார் நிறுவனங்களுக்கு உதவும்நோக்கத்துடன் செயல் படும் மத்திய அரசைக் கண்டித்தும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில்நாகர்கோவில் பிஎஸ் என்எல் பவன் முன்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் கே.கங்காதரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஜார்ஜ்பேசினார். மாவட்டப் பொருளாளர் பா.ராஜூஉட்பட திரளான ஊழியர் கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

சிம்கார்டு தயாரிப்பு ஒப்பந்தத்தை தாமதம் செய்வதா?
தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 13 -சிம்கார்டு தயாரிப்புக் கான ஒப்பந்தம் விடுவதில், காலதாமதம் செய்யப் படுவதைக் கண்டித்து, தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் செவ் வாய்க்கிழமையன்று புதுக் கோட்டையில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.செல்போன், இணைய தளம் போன்ற செயல் பாடுகளுக்கு பிஎ°என் எல் சார்பில் சிம்கார்டு கள் விற்பனை செய்யப்படு கின்றன. இந்நிலையில் தொலைத் தொடர்பு வட்டங்களின் தேவைக் கேற்ப- கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக சிம்கார் டுகள் ஒதுக்கீடு செய்யப் படவில்லை. இதனால், சுமார் 80 ஆயிரம் வாடிக்கை யாளர்களுக்கு சிம்கார்டு களை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது பிஎ°என்எல் நிறுவனத் தை முடக்கும் செயல்பாடு களில் ஒன்றாகப் பார்க்கப் படுகிறது.எனவே, இதைக் கண்டித்து, புதுக்கோட்டை தொலைத்தொடர்பு அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் கே.நடராஜன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செய லாளர் எம்.மல்லிகா, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.கல்லடியான், கிளைச் செயலாளர் எம்.பால சுமாரன் உள்ளிட்டோர் பேசினர்.

மதுரை


பிஎஸ்என்எல் சிம்கார்டு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதுரை, தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் உடனடியாக சிம்கார்டு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்,ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொதுத்துறையான பிஎஸ்என்எல்லில் தமிழ்நாடு கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் கடந்த ஒரு மாத காலமாக சிம்கார்டு வினியோகம் நடைபெறவில்லை. இதுவரை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் நான்கு முறை கடிதம் எழுதியும் இதுவரை நிர்வாகம் சிம்கார்டுகளை வழங்கவில்லை. இதனைக் கண்டித்தும், பொங்கல் பண்டிகைக்கு முன்பணம் வழங்காததைக் கண்டித்தும், ஜிபிஎப்உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பீபீகுளத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சி.செல்வின் சத்தியராஜ், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமாவட்டத்தலைவர் கே.வீரபத்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் என்.சோனைமுத்து ஆகியோர் பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.மாயாண்டி நன்றி கூறினார். மதுரை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி திண்டுக்கல்,பழனி, தேனி, கம்பம் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி \

 சிறப்பு வாய்ந்த மாநில செயற்குழு>>> CLICK HERE <<<<

திங்கள், 12 ஜனவரி, 2015

அறிவியல் மனப்பாங்கு உலர்ந்து உதிர்கிறதா?

அறிவியல் மனப்பாங்கு உலர்ந்து உதிர்கிறதா?


நம் அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில், `அடிப்படைக் கடமைகள்’ குறித்துக் கூறும், 51-ஏ (எச்) பிரிவு, “அறிவியல் மனப்பான்மை, மனிதாபிமானம் மற்றும் எதையும் ஆய்வு செய்து, சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வளர்த் தெடுப்பது’’ என்று வரையறுக்கிறது.`இந்துத்துவா பரிவாரங்கள்’ இத்தகைய அரசமைப்புச் சட்டம் விதித்திருக்கும் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் நேரெதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மும்பையில் நடைபெற்ற 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் நடந்தது என்ன?
`சமஸ்கிருதம் மூலம் வேதகால அறிவியல்’ என்று அழைக்கப்பட்ட சிறப்பு அமர்வு எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது என்றே கூற வேண்டும். புராதன காலத் தில் (“இந்து நாகரிகக்காலத்தின்’’ பெரு மைமிகு காலம் என்று வாசிக்க) இந்திய அறிவியல் மிகவும் பெருமைப்படக்கூடிய அளவிற்குப் பேரழகுடன் விளங்கியது என்று கூறி அதற்குப் பல உதாரணங்கள் கூறப்பட்டன. ஆகாய விமானங்களை இயக்கக்கூடிய விமானிகளை உருவாக்கும் பயிற்சி மையத்திற்கு முதல்வ ராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 5000 ஆண்டுவாக்கில், ஆகாயவிமானங்களை உருவாக்கும் தொழில் நுட்பம் இந்தியாவில் இருந்தது என்று சரடுவிட்டிருக்கிறார்.
இதற்கு சமஸ்கிருத நூலான, வியமானிக சாஸ்திரம் என்னும் நூலை ஆதாரமாக முன்வைக்கிறார். அதில்மகரிஷி பரத்வாஜா ஆகாயவிமான தொழில்நுட்பத்தைக் குறித்து ஆவணப்படுத்தி இருக்கிறார் என்று கூறுகிறார். இந்திய அறிவியல் மாநாடு ஒவ்வோராண்டும் இந்திய அறிவியலில் அடைந்த முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளைப்பற்றியும், மேற்கொண்ட பரிசோதனைகளின்போது ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும், எதிர்காலத் திசைவழியைத் தீர்மானிக்கக்கூடிய விதத்திலும் விவாதித்திடும் அமைப்பாகத் தான் இதுநாள்வரை இருந்து வந்தது.
அத் தகையதோர் அமைப்பை, தங்களுடைய `அறிவியல்பூர்வமற்ற மனப்பாங்கைப்’ பரப்பிடும் ஒரு மேடையாகப் பயன்படுத்த முயற்சித்திருப்பது அருவருக்கத்தக்க ஒன்று. ஒவ்வோராண்டும் நடைபெறும் இம்முக்கிய மாநாட்டை இந்தியப் பிரதமர்தான் தொடக்கி வைப்பார். (அவர் உடல் நலிவின்றி இருந்தால் மட்டும் விதிவிலக்கு உண்டு.) அந்த சமயத்தில் அவர்அறிவியல் சமூகத்திடமிருந்து அரசாங் கத்தின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்தும் அரசாங்கத்தின் கொள் கைத் திசை குறித்தும் கோடிட்டுக் காட்டிடுவார்.
இப்போது மோடி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின், வரலாற்றை திருத்திஎழுதுவது மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் எண்ணற்ற தலை வர்களிடமிருந்து நம் பண்டைக்காலத்தை வானளாவப் புகழ்ந்து தள்ளுவது ஆகியவற்றால் அனைவரையும் மலைக் கவைக்கும் அறிக்கைகள் வந்துகொண்டி ருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது அறிவியல் மாநாட்டிலும் விசித்திரமான கூற்றுகள் எல்லாம் அரங் கேறத் தொடங்கி இருக்கின்றன.
இவ்வாறு விசித்திரமான முறையில் பேசுவதிலிருந்து பிரதமர்கூட விதிவிலக்காகிவிடவில்லை. மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் பிள்ளையாருக்கு இருக்கும் யானை தலையையும் மனித உடலையும் குறிப்பிட்டு இதன்மூலம் அந்தக்காலத்திலேயே நம் நாட்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைமூலம் விலங்கின் தலையையும், மனிதனின் உடலையும் பொருத்தும் வல்லமையை நம் முன்னோர் பெற்றிருந்தார்கள் என்று பேசியவர்தான்.
அதேபோல் ஆண்-பெண் சேர்க்கையின்றி கர்ணன் பிறப்பு நடந்ததுகூட அறிவியலாளர்களின் சாதனை என்று அளக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவ்வாறு, போலி விஞ்ஞானக் கற்பனைகள் மூலமாக அறிவியல் வரலாற் றுக்கும் பொது வரலாற்றுக்கும் மாற்றாக தங்கள் புராணக் கதைகளை வைத்திடும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இவ்வாறு முட்டாள்தனமான, கேலிக்குரிய முறையில் எண்ணற்ற கூற்றுகளை ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமேதும் இல்லை. வான் கோள்களின் ஆய்வியல், கணிதம் ஆகியதுறைகளில் உண்மையில் அளப்பரிய சாதனைகளை இந்திய விஞ்ஞானிகள் படைத்திருக்கிறார்கள். பூஜ்யம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் நவீன அறிவியலே சாத்தியமாகி இருக்காது. பூஜ்யம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவிலி என்னும் கருத்தாக் கமும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றைத் தொடர்ந்து எதிர்மறை எண்கள் விகிதமுறா எண்கள், இருபடிச் சமன்பாடுகள் போன்று எண்ணற்ற கணித கண்டுபிடிப்புகள் வெளிக்கொணரப்பட்டிருக்க முடியாது. இவை எல்லாம் குறித்தும் மேற்கத்திய உலகம், அராபிய வர்த்தகர்கள் மூலம் அறிந்து கொண்டபோதிலும், (அவர்கள் தான் இத்தகைய அறிவியல் சாதனை களை மேற்கத்திய உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள்),
அவர்கள் இவை கண்டுபிடிக்கப்படுவதற்கு இந்திய விஞ்ஞானி களே காரணம் என்பதையும் மிகவும்நேர்மையான முறையில் உலகுக்குப் பறை சாற்றினார்கள். ஆயினும் இவைஅனைத்தும் கி.மு. எட்டாம் நூற்றாண் டுக்கு வெகு காலத்திற்குப் பின்னர்தான் (அதாவது தற்போது ஆர்எஸ்எஸ்பாஜக கூட்டம் குறிப்பிடும் காலத்திற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான்) நடந்துள்ளன என்று வரலாற்றாய் வாளர்கள் அறிவியல்பூர்வமாக மெய்ப்பித் திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் கூறும் காலமான ஏழாயிரம் ஆண்டு களுக்கு முன் இம்மண்ணில் மனித குல நாகரிகம் எப்படி இருந்தது? தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மானுட வியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மிகவும் உழைத்து அறி வியல் நடைமுறைகளின் மூலமாக மனித குல வளர்ச்சியை ஆவணப்படுத்தி இருக் கிறார்கள்.
கி.மு. 5000க்கும் 4000க்கும் இடையில், மனிதகுல வளர்ச்சி மற்றும்செயல்பாடுகள் என்பவை மக்களால்“கைகளால் செய்யப்பட்ட மட்பாண்டங் கள் மற்றும் பருத்தி விவசாயம்’’ என்கிற அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பு தொல்பொருள் ஆய்வாளர்கள் மொகஞ்சா தாரோ நாகரிகத்தை ஆய்வு செய்து அதன்அடிப்படையில் இத்தகைய முடிவுக்குவந்திருக்கிறார்கள். இது, மொகஞ் சாதாரோ-2 கால கட்டம் என்று அழைக்கப் படுகிறது.
அத்தகைய காலகட்டத்தில் ஆகாய விமானத் தொழில்நுட்பம் போன்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இருந்தன என்ற கற்பனை நம்பமுடியாத ஒன்று என்று தலைசிறந்த இந்திய வரலாற்று அறிஞர்கள் இந்திய மக்கள் வரலாற்று மாநாட்டில் கூட்டாக சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 2015 ஜனவரி 6 அன்று `தி இந்து’ நாளேடு தீட்டியுள்ள தலையங்கத்தில், “மனிதகுலம் வானத்தில் பறப்பது போன்று கற்பனை செய்வது என்பது பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. (எடுத்துக்காட்டாக, லியார்னடோ டா வின்சி காலத்திலேயே, உண்மையில் ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஓர் ஆகாயவிமானம் குறித்த விவரமான வரைபடங் கள் வரையப் பட்டிருக்கின்றன -ஆசிரியர்) இத்தகைய கற்பனைகளையெல்லாம், கற்பனைக் கதைகள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமேதவிர, இவையெல்லாம் அறிவியல் உண்மைகள் அல்ல.
கிரேக்க புராணக் கதைகளில்கூட வேதாளம் போன்ற கற்பனை உயிரினங்கள் குறித்து கூறப்பட்டிருக்கின்றன. அத்தகைய புராணக் கதைகளில் கூறப்பட் டிருப்பதைப்போல மிகப்பெரிய உருவங்களில் விலங்குகளை உருவாக்கும் உயிரணுக்களை தற்போதுள்ள விஞ்ஞானி களால் உருவாக்க முடியும். எனவே அந்தக் காலத்திலேயே கிரேக்கர்கள் மிகப்பெரிய விலங்கினங்களை உருவாக்கும் அறிவியலின் முன்னோடிகள் எனக் கூற முடியுமா?
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது அறிவியல் கற்பனைகளில் காணப்படும் பல வகை உருவங்கள் போன்று உருவாக் கும் வல்லமையை இன்றைய அறிவியலாளர்கள் பெற்றுக் கொண்டிருக் கின்றனர். எனவே இதுவெல்லாம் அன்றே இருந்தது என்று கூற முடியுமா? அறிவியல் கற்பனைக் கதைகளின் முன்னோடியான சர் ஆர்தர் சி கிளார்க் 1945ல் தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள்கள் குறித்து ஓர் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறார். இன்றையதினம் அவர்எண்ணி எழுதியதுபோல ஒவ்வோராண் டும் டஜன் கணக்கில் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.’’மாறாக, இந்துத்துவா கூட்டத்தாரின் கூற்றுக்களையெல்லாம் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்வோமானால், பண்டைக் காலத்தில் அறிவியல் ரீதியாக அத்தகைய கண்டுபிடிப்புகளை நாம் பெற்றிருக்கையில்,
இம்மண்ணில் இருந்த பல்வேறு சமஸ்தானங்களும், நம் நாட்டுமீது படையெடுத்து வந்த அந்நியர்களை ஏன் தோற்கடிக்க முடிய வில்லை, இந்தியா வெள்ளையரின் காலனிஆதிக்கத்தின் கீழ் மாறுவதற்கான காரணம் என்ன என்பவை குறித்தும் அவர்கள் விளக்கிட வேண்டும். நம் நாட்டின்மீது இந்துகுஷ் மலைப்பகுதி வழி யாகவும், பிற வழிகளின் வழியேயும் படை யெடுத்து வந்தவர்கள் பயன்படுத்திய அறிவியல்ரீதியில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தியதுதான்,
நம் நாட்டில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் அவர்களிடம் சமர் புரிந்து வெற்றிபெற முடியவில்லை என்பது தான் அடிப்படைக் காரணமாகும். இந்துத்துவா கூட்டம் புராதன இந்துநாகரிகத்தினை குறைத்து மதிப்பிட்டுள் ளார்கள் என்று மார்க்சிஸ்ட் வரலாற்றா சிரியர்கள் மீது அடிக்கடி குற்றம் சுமத்துகிறது. இந்துத்துவா கூட்டம் புனைந்திடும் “வரலாற்றை’’யெல்லாம் நாம் இப்பகுதியில் தொடர்ந்து அம்பலப் படுத்திக்கொண்டு வருகிறோம். மாறாக, இவர்களின் கருத்துக்கள் குறித்து 2015 ஜனவரி 6 தேதியிட்ட தி ஆசியன் ஏஜ் நாளேடு தன் தலை யங்கத்தில் என்ன கூறியிருக்கிறது என்று பார்ப்போம்.
“புராதன இந்தியாவின் முன்னேற்றங்கள், பேராசிரியர் இர்பான் ஹபிப் (இவர் ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது) அல்லது மகா பண்டிட் ராகுல சாங்கிருத்தியாயன் (இவர்களுடன் டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா, ரொமிலா தாப்பர் மற்றும் பலரையும் இப்பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்-ஆசிரியர்) போன்ற மார்க்சிஸ்ட்டுகளால் எழுதப்பட்டவைகளிலிருந்துதான் மிகவும் விரிவான அளவில் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன. உண்மையில், காவிக் கூட்டத்தைச் சேர்ந்த எவரொருவராலும் வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய விதத்தில் இத்தகைய அறிவார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூற முடியாது.’’“இந்திய அறிவியல் மாநாட்டில் காவிநூலால் பின்னப்பட்ட ஆடை’’ என்று தலைப்பிட்டு எழுதியுள்ள இத்தலை யங்கம் மேலும், “விவாதத்திற்காக, காவிக்கூட்டத்தினர் காவி நூலால் இந்திய அறிவியல் காங்கிரசில் பின்னும் ஜோடனைகளை ஏற்றுக்கொண்டு புரா தன இந்தியர்கள் ஆகாய விமானங்களில் வான மண்டலத்தில் உள்ள பல்வேறு கிரகங்களுக்கும் சென்றனர் என்று வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். அப்படி சிறந்து விளங்கிய நம்மால், ஆகாயவிமானம் இருக்கட்டும், இப்போது சொந்த மாக ஒரு காரைக்கூட தயாரிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோமே, அதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டிருக்கிறது. இவ்வாறு கேட்டுவிட்டு, “சொந்த மதத்திற்கு திரும்புவோம்’’(கர்வபாசி) என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத வெறியர்கள் பிற்போக்கான தத்துவார்த்த நிலைப்பாட்டை பிரச்சாரம் செய்வதற்காக இப்போது அறிவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் அமைப்புகளையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துவிட்டதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், என்று தலை யங்கத்தை முடித்திருக்கிறது. உண்மையில், நாட்டின் இன்றைய ஆட்சி அதிகாரம் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்டது போன்றே நடந்துகொண்டிருக்கிறார்கள். அறிவியல் மாநாடு நடைபெற்ற அன்றைய தினமே,ஆர்எஸ்எஸ் தலைவர், அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், “இப் போதைய சாதகமான நிலையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா ஓர் இந்து நாடு,’’ என்று பேசி இருக்கிறார். மோடி அரசாங்கத்தின் `குறிக்கோள்’ என்ன என்பதுகுறித்து இதற்கும் மேல் சொல்ல வேண்டுமா, என்ன?இன்றைய தினம் நாடு எதிர் நோக்கியுள்ள ஆபத்துக்கள் இவை களாகும். கோல்வால்கர் பிரச்சாரம் செய்ததைப் போன்று இந்து பெருமையை நிலை நிறுத்திட, தற்போதைய நவீன மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ்-இன் குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றியமைத்திட, `அறிவியலற்ற மனப்பாங்கைப்’ பரப்புவதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுத வேண்டியது இவர்களது தேவையாகும். நாடும் நாட்டு மக்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இவர்களது இத்தகைய இழிவான முயற்சிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.தமிழில்: ச.வீரமணி
அறிவியல் கற்பனைகளில் காணப்படும்பலவகை உருவங்கள் போன்றுஉருவாக்கும் வல்லமையை இன்றைய அறிவியலாளர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். எனவே இதுவெல்லாம் அன்றேஇருந்தது என்று கூற முடியுமா?

வெள்ளி, 9 ஜனவரி, 2015

TNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் 09-01-2014 இன்று நடைபெற்றது. அதில் BSNLEU மாநில செயலர் தோழர்.பாபுராதகிருஷ்ணன் , அகில இந்திய உதவிப்பொதுச்செயலர். தோழர்.செல்லப்பா, மாநில  துனைத்தலைவர் கே.மாரிமுத்து ஆகியோர் பங்கேற்று வாழ்த்துவழங்கினார்கள்

கோவை தர்ணா


இன்று கோவையில் நடைபெற்ற தர்ணாவில் சுமார் 400 க்கும் மேற்பட்ட தோழர்,தோழியர்கள் பங்கேற்றனர்
வியாழன், 8 ஜனவரி, 2015

அரசுத்துறைகளில் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவதை கட்டாயமாக்கக் கோரி தாராபுரத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்


தாராபுரம், ஜன. 8-

மத்திய, மாநில அரசுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் அண்ணாசிலை முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் சார்பில் தர்ணாபோராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் சங்ககூட்டமைப்பு நிர்வாகிகளான எம்.நாச்சிமுத்து, ஆர்.லோகநாதன், சி.பாலகிருஷ்ணன், பி.செல்லமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.
மேலும் எஸ்.செல்வராஜ் வரவேற்றார். கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் எல்.பரமேஸ்வரன் துவக்கவுரையாற்றினார். மேலும் இந்த போராட்டத்தில் பிபிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்கவேண்டும். மேலும் முன்னேற்றம் விரிவாக்கம் மற்றும் சிறந்த சேவைகளை தருவதற்கு தேவையான கருவிகளை உடனடியாக வாங்க வேண்டும்.பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் இணைக்கும் முடிவினை கைவிடவேண்டும்.
மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவது என்பதை கட்டாயமாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கண்ணுச்சாமி, டி.பி.பழனிச்சாமி, ஜி.குமார்,வி.மணியன், எஸ்.அய்யாச்சாமி, என்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் என்.புண்ணியகோடி நன்றி தெரிவித்தார்.

புதன், 7 ஜனவரி, 2015

தர்ணா 
மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை

மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை

மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை


மத்திய, மாநில அரசைச் சார்ந்த அனைத்து துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் திருப்பூரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.பிஎஸ்என்எல் நிறுவனத்தை முன்னேற்றவும், சேவையை விரிவுபடுத்தி சிறப்பாக செயல்படவும் தேவையான உபகரணங்களை உடனடியாக வாங்க வேண்டும்.
இரு இயக்குநர் பணியிடங்கள் உள்பட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராமப்புற தரைவழி தொலைத்தொடர்பு சேவை கொடுப்பதால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட வேண்டும். துணை டவர் நிறுவன உருவாக்கத்தைக் கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்டம் தொகை ரூ. 6 ஆயிரத்து 400 கோடியை திருப்பித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6, 7 மற்றும் 8 தேதிகளில் அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் நடத்துவது என்றுபிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்திருந்தது.
அதன்படி திருப்பூரில் செவ்வாயன்று இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. என்எப்டிஇ சார்பில் ஆண்டனி மரிய பிரகாஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் கே.வாலீசன் ஆகியோர் தலைமை தாங்கினர். அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அமைப்பாளர் சி.ராஜேந்திரன் இந்த தர்ணா போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். இப்போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஏஐடியுசி சார்பில் தண்டபாணி மற்றும் ஓய்வு பெற்றபிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்சார்பில் பா.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
  
அகில இந்திய Forum அறைகூவலை ஏற்று இன்று தமிழகம் முழுவதும் தர்ணா வெற்றிகரமாக நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னை CGM அலுவலகத்தில் அனைத்து சங்க மாநிலச் செயலர்கள், அகில இந்திய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பல மாவட்டங்களில் கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து சில புகைப்படங்கள்.
 Read | Download

செய்தி

http://bsnleucbt.blogspot.in/பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இலவசமாக ஸ்பெக்டரம் ஒதுக்கிடுக


பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் தர்ணா போராட்டம்ஈரோடு, ஜன. 7-
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இலவசமாக ஸ்பெக்டரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்திலுள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மாதக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளசிஎம்டிஉள்ளிட்ட இரண்டு இயக்குநர் பதவிகளை உடனடியாக நிரப்பிடவேண்டும்.
துணை டவர் நிறுவனத்தின் உருவாக்கத்தை கைவிட வேண்டும். கிராமப்புற தரைவழி தொலை தொடர்பு சேவைகள் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டத்தினை போதுமான வகையில் ஈடுகட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவது என்பதை கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாயன்று ஈரோட்டில் பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கே.அய்யாவு, டி.ராஜேந்திரன், கே.வேலு, கே.கே.தண்டபாணி, ஏ.காந்திமதி, எஸ்.சிவஞானம் ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்என்இஏ மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் வி.மணியன், டெப்பு சங்கத்தின் அகில இந்திய உதவிச் செயலாளர் பி.காசிராஜன், என்எப்டிஇ மாநில துணைச் செயலாளர் யாசின்அலிகான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
மேலும், எல்.பரமேஸ்வரன், ஜி.குமார், சி.பரமசிவம் உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இந்த தர்ணா போராட்டத்தில் அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஆர்.நடராஜன், வி,சசிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், ஆர். பிரபாகரன், மணி, ஆர்.சேதுராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்தஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

நன்றி 
தீக்கதிர்