தர்ணா
மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை |
மாவட்டசெயலர்.C.R. துவக்கவுரை |
மத்திய, மாநில அரசைச் சார்ந்த அனைத்து துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் திருப்பூரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.பிஎஸ்என்எல் நிறுவனத்தை முன்னேற்றவும், சேவையை விரிவுபடுத்தி சிறப்பாக செயல்படவும் தேவையான உபகரணங்களை உடனடியாக வாங்க வேண்டும்.
இரு இயக்குநர் பணியிடங்கள் உள்பட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராமப்புற தரைவழி தொலைத்தொடர்பு சேவை கொடுப்பதால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட வேண்டும். துணை டவர் நிறுவன உருவாக்கத்தைக் கைவிட வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்டம் தொகை ரூ. 6 ஆயிரத்து 400 கோடியை திருப்பித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6, 7 மற்றும் 8 தேதிகளில் அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் நடத்துவது என்றுபிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு செய்திருந்தது.
அதன்படி திருப்பூரில் செவ்வாயன்று இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. என்எப்டிஇ சார்பில் ஆண்டனி மரிய பிரகாஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் கே.வாலீசன் ஆகியோர் தலைமை தாங்கினர். அனைத்து சங்கங்கள் கூட்டுக்குழு அமைப்பாளர் சி.ராஜேந்திரன் இந்த தர்ணா போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். இப்போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், ஏஐடியுசி சார்பில் தண்டபாணி மற்றும் ஓய்வு பெற்றபிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்சார்பில் பா.சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
அகில இந்திய Forum அறைகூவலை ஏற்று இன்று தமிழகம் முழுவதும் தர்ணா வெற்றிகரமாக நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னை CGM அலுவலகத்தில் அனைத்து சங்க மாநிலச் செயலர்கள், அகில இந்திய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பல மாவட்டங்களில் கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து சில புகைப்படங்கள். Read | Download
செய்தி
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இலவசமாக ஸ்பெக்டரம் ஒதுக்கிடுக
பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் தர்ணா போராட்டம்
ஈரோடு, ஜன. 7-
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இலவசமாக ஸ்பெக்டரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்திலுள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மாதக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளசிஎம்டிஉள்ளிட்ட இரண்டு இயக்குநர் பதவிகளை உடனடியாக நிரப்பிடவேண்டும்.
துணை டவர் நிறுவனத்தின் உருவாக்கத்தை கைவிட வேண்டும். கிராமப்புற தரைவழி தொலை தொடர்பு சேவைகள் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டத்தினை போதுமான வகையில் ஈடுகட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்துவது என்பதை கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாயன்று ஈரோட்டில் பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கே.அய்யாவு, டி.ராஜேந்திரன், கே.வேலு, கே.கே.தண்டபாணி, ஏ.காந்திமதி, எஸ்.சிவஞானம் ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்என்இஏ மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் வி.மணியன், டெப்பு சங்கத்தின் அகில இந்திய உதவிச் செயலாளர் பி.காசிராஜன், என்எப்டிஇ மாநில துணைச் செயலாளர் யாசின்அலிகான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
மேலும், எல்.பரமேஸ்வரன், ஜி.குமார், சி.பரமசிவம் உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இந்த தர்ணா போராட்டத்தில் அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஆர்.நடராஜன், வி,சசிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், ஆர். பிரபாகரன், மணி, ஆர்.சேதுராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்தஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
நன்றி
தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக