அறிவியல் மனப்பாங்கு உலர்ந்து உதிர்கிறதா?
நம் அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில், `அடிப்படைக் கடமைகள்’ குறித்துக் கூறும், 51-ஏ (எச்) பிரிவு, “அறிவியல் மனப்பான்மை, மனிதாபிமானம் மற்றும் எதையும் ஆய்வு செய்து, சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வளர்த் தெடுப்பது’’ என்று வரையறுக்கிறது.`இந்துத்துவா பரிவாரங்கள்’ இத்தகைய அரசமைப்புச் சட்டம் விதித்திருக்கும் வழிகாட்டுதலுக்கு முற்றிலும் நேரெதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மும்பையில் நடைபெற்ற 102ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் நடந்தது என்ன?
`சமஸ்கிருதம் மூலம் வேதகால அறிவியல்’ என்று அழைக்கப்பட்ட சிறப்பு அமர்வு எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது என்றே கூற வேண்டும். புராதன காலத் தில் (“இந்து நாகரிகக்காலத்தின்’’ பெரு மைமிகு காலம் என்று வாசிக்க) இந்திய அறிவியல் மிகவும் பெருமைப்படக்கூடிய அளவிற்குப் பேரழகுடன் விளங்கியது என்று கூறி அதற்குப் பல உதாரணங்கள் கூறப்பட்டன. ஆகாய விமானங்களை இயக்கக்கூடிய விமானிகளை உருவாக்கும் பயிற்சி மையத்திற்கு முதல்வ ராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 5000 ஆண்டுவாக்கில், ஆகாயவிமானங்களை உருவாக்கும் தொழில் நுட்பம் இந்தியாவில் இருந்தது என்று சரடுவிட்டிருக்கிறார்.
இதற்கு சமஸ்கிருத நூலான, வியமானிக சாஸ்திரம் என்னும் நூலை ஆதாரமாக முன்வைக்கிறார். அதில்மகரிஷி பரத்வாஜா ஆகாயவிமான தொழில்நுட்பத்தைக் குறித்து ஆவணப்படுத்தி இருக்கிறார் என்று கூறுகிறார். இந்திய அறிவியல் மாநாடு ஒவ்வோராண்டும் இந்திய அறிவியலில் அடைந்த முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளைப்பற்றியும், மேற்கொண்ட பரிசோதனைகளின்போது ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும், எதிர்காலத் திசைவழியைத் தீர்மானிக்கக்கூடிய விதத்திலும் விவாதித்திடும் அமைப்பாகத் தான் இதுநாள்வரை இருந்து வந்தது.
அத் தகையதோர் அமைப்பை, தங்களுடைய `அறிவியல்பூர்வமற்ற மனப்பாங்கைப்’ பரப்பிடும் ஒரு மேடையாகப் பயன்படுத்த முயற்சித்திருப்பது அருவருக்கத்தக்க ஒன்று. ஒவ்வோராண்டும் நடைபெறும் இம்முக்கிய மாநாட்டை இந்தியப் பிரதமர்தான் தொடக்கி வைப்பார். (அவர் உடல் நலிவின்றி இருந்தால் மட்டும் விதிவிலக்கு உண்டு.) அந்த சமயத்தில் அவர்அறிவியல் சமூகத்திடமிருந்து அரசாங் கத்தின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்தும் அரசாங்கத்தின் கொள் கைத் திசை குறித்தும் கோடிட்டுக் காட்டிடுவார்.
இப்போது மோடி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின், வரலாற்றை திருத்திஎழுதுவது மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் எண்ணற்ற தலை வர்களிடமிருந்து நம் பண்டைக்காலத்தை வானளாவப் புகழ்ந்து தள்ளுவது ஆகியவற்றால் அனைவரையும் மலைக் கவைக்கும் அறிக்கைகள் வந்துகொண்டி ருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது அறிவியல் மாநாட்டிலும் விசித்திரமான கூற்றுகள் எல்லாம் அரங் கேறத் தொடங்கி இருக்கின்றன.
இவ்வாறு விசித்திரமான முறையில் பேசுவதிலிருந்து பிரதமர்கூட விதிவிலக்காகிவிடவில்லை. மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் பிள்ளையாருக்கு இருக்கும் யானை தலையையும் மனித உடலையும் குறிப்பிட்டு இதன்மூலம் அந்தக்காலத்திலேயே நம் நாட்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைமூலம் விலங்கின் தலையையும், மனிதனின் உடலையும் பொருத்தும் வல்லமையை நம் முன்னோர் பெற்றிருந்தார்கள் என்று பேசியவர்தான்.
அதேபோல் ஆண்-பெண் சேர்க்கையின்றி கர்ணன் பிறப்பு நடந்ததுகூட அறிவியலாளர்களின் சாதனை என்று அளக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவ்வாறு, போலி விஞ்ஞானக் கற்பனைகள் மூலமாக அறிவியல் வரலாற் றுக்கும் பொது வரலாற்றுக்கும் மாற்றாக தங்கள் புராணக் கதைகளை வைத்திடும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இவ்வாறு முட்டாள்தனமான, கேலிக்குரிய முறையில் எண்ணற்ற கூற்றுகளை ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதில் ஐயமேதும் இல்லை. வான் கோள்களின் ஆய்வியல், கணிதம் ஆகியதுறைகளில் உண்மையில் அளப்பரிய சாதனைகளை இந்திய விஞ்ஞானிகள் படைத்திருக்கிறார்கள். பூஜ்யம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் நவீன அறிவியலே சாத்தியமாகி இருக்காது. பூஜ்யம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவிலி என்னும் கருத்தாக் கமும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றைத் தொடர்ந்து எதிர்மறை எண்கள் விகிதமுறா எண்கள், இருபடிச் சமன்பாடுகள் போன்று எண்ணற்ற கணித கண்டுபிடிப்புகள் வெளிக்கொணரப்பட்டிருக்க முடியாது. இவை எல்லாம் குறித்தும் மேற்கத்திய உலகம், அராபிய வர்த்தகர்கள் மூலம் அறிந்து கொண்டபோதிலும், (அவர்கள் தான் இத்தகைய அறிவியல் சாதனை களை மேற்கத்திய உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள்),
அவர்கள் இவை கண்டுபிடிக்கப்படுவதற்கு இந்திய விஞ்ஞானி களே காரணம் என்பதையும் மிகவும்நேர்மையான முறையில் உலகுக்குப் பறை சாற்றினார்கள். ஆயினும் இவைஅனைத்தும் கி.மு. எட்டாம் நூற்றாண் டுக்கு வெகு காலத்திற்குப் பின்னர்தான் (அதாவது தற்போது ஆர்எஸ்எஸ்பாஜக கூட்டம் குறிப்பிடும் காலத்திற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான்) நடந்துள்ளன என்று வரலாற்றாய் வாளர்கள் அறிவியல்பூர்வமாக மெய்ப்பித் திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் கூறும் காலமான ஏழாயிரம் ஆண்டு களுக்கு முன் இம்மண்ணில் மனித குல நாகரிகம் எப்படி இருந்தது? தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மானுட வியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மிகவும் உழைத்து அறி வியல் நடைமுறைகளின் மூலமாக மனித குல வளர்ச்சியை ஆவணப்படுத்தி இருக் கிறார்கள்.
கி.மு. 5000க்கும் 4000க்கும் இடையில், மனிதகுல வளர்ச்சி மற்றும்செயல்பாடுகள் என்பவை மக்களால்“கைகளால் செய்யப்பட்ட மட்பாண்டங் கள் மற்றும் பருத்தி விவசாயம்’’ என்கிற அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பு தொல்பொருள் ஆய்வாளர்கள் மொகஞ்சா தாரோ நாகரிகத்தை ஆய்வு செய்து அதன்அடிப்படையில் இத்தகைய முடிவுக்குவந்திருக்கிறார்கள். இது, மொகஞ் சாதாரோ-2 கால கட்டம் என்று அழைக்கப் படுகிறது.
அத்தகைய காலகட்டத்தில் ஆகாய விமானத் தொழில்நுட்பம் போன்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இருந்தன என்ற கற்பனை நம்பமுடியாத ஒன்று என்று தலைசிறந்த இந்திய வரலாற்று அறிஞர்கள் இந்திய மக்கள் வரலாற்று மாநாட்டில் கூட்டாக சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 2015 ஜனவரி 6 அன்று `தி இந்து’ நாளேடு தீட்டியுள்ள தலையங்கத்தில், “மனிதகுலம் வானத்தில் பறப்பது போன்று கற்பனை செய்வது என்பது பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. (எடுத்துக்காட்டாக, லியார்னடோ டா வின்சி காலத்திலேயே, உண்மையில் ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஓர் ஆகாயவிமானம் குறித்த விவரமான வரைபடங் கள் வரையப் பட்டிருக்கின்றன -ஆசிரியர்) இத்தகைய கற்பனைகளையெல்லாம், கற்பனைக் கதைகள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமேதவிர, இவையெல்லாம் அறிவியல் உண்மைகள் அல்ல.
கிரேக்க புராணக் கதைகளில்கூட வேதாளம் போன்ற கற்பனை உயிரினங்கள் குறித்து கூறப்பட்டிருக்கின்றன. அத்தகைய புராணக் கதைகளில் கூறப்பட் டிருப்பதைப்போல மிகப்பெரிய உருவங்களில் விலங்குகளை உருவாக்கும் உயிரணுக்களை தற்போதுள்ள விஞ்ஞானி களால் உருவாக்க முடியும். எனவே அந்தக் காலத்திலேயே கிரேக்கர்கள் மிகப்பெரிய விலங்கினங்களை உருவாக்கும் அறிவியலின் முன்னோடிகள் எனக் கூற முடியுமா?
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது அறிவியல் கற்பனைகளில் காணப்படும் பல வகை உருவங்கள் போன்று உருவாக் கும் வல்லமையை இன்றைய அறிவியலாளர்கள் பெற்றுக் கொண்டிருக் கின்றனர். எனவே இதுவெல்லாம் அன்றே இருந்தது என்று கூற முடியுமா? அறிவியல் கற்பனைக் கதைகளின் முன்னோடியான சர் ஆர்தர் சி கிளார்க் 1945ல் தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள்கள் குறித்து ஓர் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறார். இன்றையதினம் அவர்எண்ணி எழுதியதுபோல ஒவ்வோராண் டும் டஜன் கணக்கில் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.’’மாறாக, இந்துத்துவா கூட்டத்தாரின் கூற்றுக்களையெல்லாம் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்வோமானால், பண்டைக் காலத்தில் அறிவியல் ரீதியாக அத்தகைய கண்டுபிடிப்புகளை நாம் பெற்றிருக்கையில்,
இம்மண்ணில் இருந்த பல்வேறு சமஸ்தானங்களும், நம் நாட்டுமீது படையெடுத்து வந்த அந்நியர்களை ஏன் தோற்கடிக்க முடிய வில்லை, இந்தியா வெள்ளையரின் காலனிஆதிக்கத்தின் கீழ் மாறுவதற்கான காரணம் என்ன என்பவை குறித்தும் அவர்கள் விளக்கிட வேண்டும். நம் நாட்டின்மீது இந்துகுஷ் மலைப்பகுதி வழி யாகவும், பிற வழிகளின் வழியேயும் படை யெடுத்து வந்தவர்கள் பயன்படுத்திய அறிவியல்ரீதியில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தியதுதான்,
நம் நாட்டில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் அவர்களிடம் சமர் புரிந்து வெற்றிபெற முடியவில்லை என்பது தான் அடிப்படைக் காரணமாகும். இந்துத்துவா கூட்டம் புராதன இந்துநாகரிகத்தினை குறைத்து மதிப்பிட்டுள் ளார்கள் என்று மார்க்சிஸ்ட் வரலாற்றா சிரியர்கள் மீது அடிக்கடி குற்றம் சுமத்துகிறது. இந்துத்துவா கூட்டம் புனைந்திடும் “வரலாற்றை’’யெல்லாம் நாம் இப்பகுதியில் தொடர்ந்து அம்பலப் படுத்திக்கொண்டு வருகிறோம். மாறாக, இவர்களின் கருத்துக்கள் குறித்து 2015 ஜனவரி 6 தேதியிட்ட தி ஆசியன் ஏஜ் நாளேடு தன் தலை யங்கத்தில் என்ன கூறியிருக்கிறது என்று பார்ப்போம்.
“புராதன இந்தியாவின் முன்னேற்றங்கள், பேராசிரியர் இர்பான் ஹபிப் (இவர் ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது) அல்லது மகா பண்டிட் ராகுல சாங்கிருத்தியாயன் (இவர்களுடன் டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா, ரொமிலா தாப்பர் மற்றும் பலரையும் இப்பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்-ஆசிரியர்) போன்ற மார்க்சிஸ்ட்டுகளால் எழுதப்பட்டவைகளிலிருந்துதான் மிகவும் விரிவான அளவில் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன. உண்மையில், காவிக் கூட்டத்தைச் சேர்ந்த எவரொருவராலும் வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய விதத்தில் இத்தகைய அறிவார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூற முடியாது.’’“இந்திய அறிவியல் மாநாட்டில் காவிநூலால் பின்னப்பட்ட ஆடை’’ என்று தலைப்பிட்டு எழுதியுள்ள இத்தலை யங்கம் மேலும், “விவாதத்திற்காக, காவிக்கூட்டத்தினர் காவி நூலால் இந்திய அறிவியல் காங்கிரசில் பின்னும் ஜோடனைகளை ஏற்றுக்கொண்டு புரா தன இந்தியர்கள் ஆகாய விமானங்களில் வான மண்டலத்தில் உள்ள பல்வேறு கிரகங்களுக்கும் சென்றனர் என்று வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். அப்படி சிறந்து விளங்கிய நம்மால், ஆகாயவிமானம் இருக்கட்டும், இப்போது சொந்த மாக ஒரு காரைக்கூட தயாரிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோமே, அதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டிருக்கிறது. இவ்வாறு கேட்டுவிட்டு, “சொந்த மதத்திற்கு திரும்புவோம்’’(கர்வபாசி) என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத வெறியர்கள் பிற்போக்கான தத்துவார்த்த நிலைப்பாட்டை பிரச்சாரம் செய்வதற்காக இப்போது அறிவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் அமைப்புகளையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துவிட்டதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், என்று தலை யங்கத்தை முடித்திருக்கிறது. உண்மையில், நாட்டின் இன்றைய ஆட்சி அதிகாரம் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்டது போன்றே நடந்துகொண்டிருக்கிறார்கள். அறிவியல் மாநாடு நடைபெற்ற அன்றைய தினமே,ஆர்எஸ்எஸ் தலைவர், அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், “இப் போதைய சாதகமான நிலையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா ஓர் இந்து நாடு,’’ என்று பேசி இருக்கிறார். மோடி அரசாங்கத்தின் `குறிக்கோள்’ என்ன என்பதுகுறித்து இதற்கும் மேல் சொல்ல வேண்டுமா, என்ன?இன்றைய தினம் நாடு எதிர் நோக்கியுள்ள ஆபத்துக்கள் இவை களாகும். கோல்வால்கர் பிரச்சாரம் செய்ததைப் போன்று இந்து பெருமையை நிலை நிறுத்திட, தற்போதைய நவீன மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ்-இன் குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றியமைத்திட, `அறிவியலற்ற மனப்பாங்கைப்’ பரப்புவதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுத வேண்டியது இவர்களது தேவையாகும். நாடும் நாட்டு மக்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இவர்களது இத்தகைய இழிவான முயற்சிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.தமிழில்: ச.வீரமணி
அறிவியல் கற்பனைகளில் காணப்படும்பலவகை உருவங்கள் போன்றுஉருவாக்கும் வல்லமையை இன்றைய அறிவியலாளர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். எனவே இதுவெல்லாம் அன்றேஇருந்தது என்று கூற முடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக