தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

புதன், 14 ஜனவரி, 2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



























அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சிப் பொங்கல் பொங்கட்டும்!
ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து

சென்னை, ஜன. 14-
அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும், கொண்டாடி குதூகலிக்கும் இந்த நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது.உழுபவன் கையில் நிலம் இருக்க வேண்டும்; இருக்கும் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். உலகத்தார் அனைவருக்கும் உணவளிக்கும் உழவன் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு உரிமையுள்ளவராய் இருக்க வேண்டும். உணவளிக்கும் தொழில் கட்டுபடியானதாய், மகிழ்ச்சி தரத்தக்கதாய் அமைவதற்கு விதையும் உரமும் மருந்தும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.
நதியும் குளமும் கிணறும் பராமரிக்கப்பட்டு பாசன வசதிகள் மேம்பட்டதாய் இருக்க வேண்டும். நதிநீரில் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். அதன் மூலம் உணவளிக்கும் இத்தொழிலை உயிரினும் மேலாய் கொண்டாட வேண்டும் என்கிற உன்னதமான நிலை விவசாயிகளுக்கு வாய்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது; வாழ்த்துகிறது;
அதற்காக போராடுகிறது;ஆனால், விவசாயிகளைக் கொண்டாடவேண்டிய மத்திய-மாநில அரசுகள் அவர்க ளைத் திண்டாட வைக்கும் கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றன. அந்நிய-இந்தியபெரு நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை விவசாயிகளின் சம்மதமின்றி பறிப்பதற்கான சட்டம், மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக நஞ்சை நிலங்களை கபளீகரம் செய்யும் முயற்சி, உரங்களுக்கான மானிய வெட்டு, சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக கரும்பின் ஆதார விலையை உயர்த்த மறுப்பது, நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகையை மாநில அரசு அளிக்க முன்வந்தாலும் அதை ஏற்கமாட்டோம் என்று கூறுகிற மத்திய அரசின் நடவடிக்கை ஆகியவை விவசாயிகளை விவசாயத்தை விட்டு வேறு தொழிலை நோக்கி ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் சுரண்டப்படுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு விளைநிலங்கள் நீருக்கு ஏங்கி நிற்கும் நிலை தொடர்கிறது.இவற்றையெல்லாம் எதிர்த்து, விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது.
விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு கூடுதல் வீரியத்தோடும் வேகத்தோடும் போராடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உழவர் திருநாளில் உறுதி பூணுகிறது. அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கட்டும் என்று வாழ்த்துகிறது. இந்த மகிழ்ச்சிக்கு தடைகளாய் நிற்கும் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களும் வெற்றிகளும் பொங்கட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது.
அள்ளிக் குவித்த குப்பையும் அகற்ற வேண்டிய குப்பைகளும்...!



பொங்கல் விழா என்றாலே அதற்கு அடையாளமாக வீடுகளில் காப்புக்கட்டுதல் நடைபெறும். பொதுவாக தமிழ்நாட்டில் விழாக்கோலம் என்பதன் அடையாளமாக மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்படும். கோவில் விழாக்கள் என்றால் வேப்பிலையும் அலங்கரிக்கும் அல்லவா? அதன் ஒரு பகுதிதான் இந்த காப்புக்கட்டுதல். ஆனால் இது அடுத்த ஆண்டு பொங்கல்வரை வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் என்பது தான் அதன் முக்கியத்துவத்தை குறிக்கும்.வீடுமட்டுமல்ல, அதன் தொடர்புடைய அனைத்திலும் இந்த காப்புக் கட்டப்படும், அசையும் சொத்து, அசையாச்சொத்து என எல்லாம் அடங்கும். கோவிலில், சமாதியில், வயல்வெளியில், கடைசியாக குப்பைக்குழியிலும் தங்களின் உரிமைக்குரியது என்பதைப் பறைசாற்றும் விதத்தில் `காப்பு’ வைக்கப்படும். மற்ற எல்லா இடங்களிலும் வைப்பது சரி. குப்பைக் குழியிலேயுமா? ஆம்.கிராமங்களில் குப்பைக் குழி என்பது விவசாயிக்கு உரக்கிடங்கு. வீட்டின் கழிவுப் பொருட்களை கூட்டி அள்ளி குப்பைக் குழியில் போடுவார்கள். ஆனால் மாடு, கன்றுகளின் சாணியை மூத்திரக் கசிவோடும் கழிவான வைக்கோல் கூளத்துடனும் சேர்த்து கூட்டிப் பெருக்கி கூடையில் அள்ளிக் கொண்டுபோய் குப்பையில் கொட்டுவார்கள்.குப்பைக் குழியின் அளவு-அகல நீள ஆழம் (உயர) - வீட்டில் இருக்கும் கால்நடைகளின்-ஆடுமாடுகளின்-எண்ணிக்கையைப் பொறுத்து பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கும். இந்தக் குப்பைகள் ஏறத்தாழ ஓராண்டு காலம் அந்தக் குழியில் கிடந்து மக்கி தொழு உரமாகும். மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர், சாணியுடன் கூடிய மூத்திரநீர் எல்லாம் வைக்கோல் கூளாங்கள், சாணி, இதர குப்பைகளை ஊற வைத்து காயவைத்து நொதிக்க வைத்து மக்கிய உரமாக்கி விடும்.இந்த உரக்கிடங்கு தான் உழவுத் தொழிலுக்கு- வேளாண்மைக்கு மூல ஆதாரமாகும். இந்த உரத்தை தைமாத அறுவடை முடிந்ததும் கொஞ்ச காலம் ஓய்வெடுத்துக் கொண்டு மாசி, பங்குனியில் வயல்களுக்கு குப்பையை மாட்டு வண்டி மூலம் அள்ளிச் சென்று கொட்டுவார்கள். பின்னர் வயல் முழுவதும் பரவலாகச் சிதறிவிட்டு கோடை மழை பெய்த பின்னர் சித்திரை மாதம் அடையாளப்பூர்வமாக உழுவார்கள். பின், வைகாசி, ஆனியில் உழவுப்பணியில் ஈடுபட்டு விதை பாவுவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதைப்பது ஒரு போக சாகுபடி, புன்செய் சாகுபடிக்கும் பொருந்துவதாக அமையும்.விவசாயப் பெருங்குடி மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருவதற்கு சணல், சாக்குப் பைகளை, பிறகு துணிப்பைகளை பயன்படுத்தினர். இன்றும் கூடப் பயன்படுத்துகின்றனர்; ஆனால், எண்ணிக்கை குறைவாக. இப்போது எல்லாம் `கேரி பை’-தான் பொருட்கள் வாங்கி வரப் பயன்படுகிறது. ஆங்கில `கேரி பேக்’ தமிழில் கேரி பை ஆகிவிட்டது. மஞ்சள் பை கொண்டு போகிறவர்களை கிராமத்தான் என்று நகரத்தவர் கேலி செய்தது போய், இப்போது கிராமத்து மக்களே ஒரு மாதிரியாக பார்க்கிற காலம் வந்துவிட்டது.“நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்-பாழும்நாகரிகம் ஓடிவந்து கெடுக்கும்“ என்ற நாட்டுப்புறப்பாடல் கனகச்சிதமாகப் பொருந்துகிறது.பலசரக்குக் கடையில் காகிதப் பையில் பொட்டலம் மடித்துத் தருவதில்லை. பூக்கடையில் இலையில் பூ கட்டி தருவதில்லை. ஓட்டல்களில் `பார்சல்’ பிளாஸ்டிக் கேரி பைகளில், டீக்கடைகளில் கண்ணாடி டம்ளர்கள் காண்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. கறிக்கடையில் இலையில் கட்டிக் கொடுத்தவர்கள் இப்போது கேரி பையிலேயே தருகிறார்கள். மிட்டாய்கள், தின்பண்டங்கள் எல்லாம் வண்ணத் தாள்களில்-பிளாஸ்டிக்கில்தான்- அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக குளிர் பானங்கள் தான் உச்சத்தில் உள்ளன. இந்தச் சூழலில் சிக்கியிருப்பவர்கள் எப்படி மீள்வது...?நவீனம் என்பது சிந்தனையில் இருக்க வேண்டும். அது நம்மை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். சிக்கலையும் சிரமத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஆனால் நாம் தெரிந்தே இந்த வழியில் பயணிக்கிறோம். அதிலிருந்து பின் வாங்கத் தயங்குகிறோம் என்பது மட்டுமல்ல, தயாராகவும் இல்லை என்றே தெரிகிறது.கிராமங்களின் நிலை இதுவென்றால் நகரங்களின் நிலையைச் சொல்லவா வேண்டும்? சுவர்களில் ஒட்டப்படும் காகிதப் போஸ்டர்கள் போய் பிளக்ஸ், பேனர்கள்... “எங்கெங்கு காணினும் சக்தியடா- ஏழுகடல் அவள் வண்ணமடா” என்றார் பாரதிதாசன். இங்கோ ஏழுகடல் கரையும் கூட பிளாஸ்டிக் குப்பைகளால் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கிறது. நகரங்களின் தெருக்களில் சேரும் குப்பைகளை கொண்டுபோய்க் கொட்டுவதற்கு கம்போஸ்ட் உரக்கிடங்கு அதாவது குப்பைக் கிடங்கு இருந்தது. அங்கு மக்கிய மற்றும் சாக்கடைக் கழிவுகள் சேர்ந்த குப்பைகளை விவசாயிகள் அள்ளிச் செல்ல அனுமதிக்கப்படுவர். சேர்கிற குப்பை காலியாகவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போதோ தெருக்கோடியில் சில குப்பைத் தொட்டிகளை வைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துப் போடச் சொல்கிறார்கள். பின் அதை வண்டிகளில் எடுத்துச் செல்கிறார்கள்.மறு சுழற்சிக்கு பயன்படும் கழிவுப் பொருட்களை பிரித்து எடுத்தல் முக்கியமானது. தனிநபர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதில் பெரும் பங்கு வகிக்க முடியும். ஆனால் இப்போது அரசு டாஸ்மாக் கடைகள் பிளாஸ்டிக் குப்பைகள் குவிய முக்கியமான மையங்களாகி விடுகின்றன. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களும் பிளாஸ்டிக் குப்பைக் காடாகி வருகின்றன. இதனால் வயல்களில் பிளாஸ்டிக் குப்பைகள் சேருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இவற்றால் மண்ணின் தன்மை மாறி மலடாகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே ரசாயன உரங்களால் மண்ணின் தன்மை மட்டுமின்றி நீரின் தன்மையும் மாறிக் கொண்டிருக்கிறது. நெல் மற்றும் இதர தானியங்கள் பிறவேளாண் விளைபொருட்களில் எல்லாம் பூச்சிக் கொல்லி நச்சு கலந்து விட்டது. இதை உண்பதால் தாய்ப்பாலில் கூட நச்சுத்தன்மை ஏறிவிட்டது என்று ஆய்வக நிபுணர்கள் ஆதாரப் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.நாகரிக உலகம் என்று சொல்லப்பட்டாலும் தூய்மையான நகரம், கிராமம் என்று சொல்ல முடியாத நிலையே உள்ளது. சாக்கடை வாய்க்கால்கள், திறந்த வெளிக் கழிப்பிடங்கள் எல்லாம் எங்கணும் பரவியிருக்கும் நம் இந்திய தேசத்தில் திடீரென ஒரு நாள் கையில் துடைப்பத்துடன் தோன்றி `தூய்மை இந்தியா’ வைப் படைப்போம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் நாட்டின் பிரதமர்.வாழும் முறையை மேம்படுத்தாமல் வாழ்நிலையை சீர்படுத்தாமல் அதற்கென திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்காமல்- திட்டக்குழுவை கலைப்பவர்களால் ஒரே நாளில் போஸ் கொடுப்பதால் `தூய்மை பாரதம்‘ அவர்களால் ஏற்படுத்த முடியாது. மோடி தில்லியில் போஸ் கொடுத்தால் பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் போஸ் தருகிறார்.இதனால் மட்டும் நிலைமை மாறிவிடுமா என்ன? இவர்களது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது ஒரு திரைப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.“தெருத்தெருவாய்க் கூட்டுவது பொதுநலத் தொண்டு - ஊரார்தெரிந்து கொள்ளப் படம்பிடித்தால் சுயநலம் உண்டு”ஆளுக்கொரு வீடு, வீட்டுக்கொரு கழிப்பறை, தேவைக்கு ஏற்ப சுகாதார தொழிலாளர், சாக்கடைகளையும் மலக்குழிகளையும் எந்திரங்கள் சுத்தம் செய்தல் என்ற நிலை ஏற்படும்போது தான் மக்கள் ஆரோக்கிய வாழ்வு பெறுவர். குப்பைக் கூளங்கள் தானே என்று அலட்சியப்படுத்தாமல் குப்பைகள் மேலாண்மையை திறம்படச் செய்திட வேண்டும். சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்ற பாரதியின் வாக்கை முன்னெடுத்து வரும் சந்ததியரைக் காப்போம்.- ப.முருகன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக