தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

செவ்வாய், 13 ஜனவரி, 2015

சிம் கார்டு பற்றாக்குறை; ஒப்பந்த ஊழியருக்கு சம்பளம் இல்லை பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்





திருப்பூர்,

அலைபேசி சேவைக்கு வழங்கும் சிம்கார்டு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் மொபைல் சேவை வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையின்றி சிம் கார்டு வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் துணை நிறுவனம் உருவாக்கத்தை கைவிட வேண்டும். 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் துவங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் உள்ளிட்டவைகளின் சார்பில் செவ்வாயன்று பல்வேறு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருப்பூரில் பிஎஸ்என்எல் தலைமை தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் சங்க கிளைச் செயலாளர் ஜோதீஸ், ஒப்பந்த ஊழியர் சங்க செயலாளர் ரமேஷ், மாநிலப் பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம் உள்பட பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

கோவை

கோவை சாய்பாபா காலனி தொலைப்பேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க கிளைத் தலைவர் பத்மாவதி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் என்.அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் கே.சந்திசேகரன் சிறப்புறையாற்றினார். நிறைவாக, காந்திபார்க் கிளை தலைவர் சுந்தரராஜன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகவேல் மற்றும் அய்யாவு ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.பரமேஸ்வரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை விரோத கொள்கைகளை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.


மத்திய அரசைக் கண்டித்து நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்


நாகர்கோவில், ஜன.13-தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சிம் கார்டுகள் தட்டுபாட்டைக் கண்டித்துபிஎஸ்என்எல் ஊழியர்கள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் பிஎஸ் என்எல் நிறுவனத்தில் சிம் கார்டுகள் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் காணப்படுவதால் வாடிக்கை யாளர்களுக்கு சிரமம் ஏற் பட்டுள்ளது. தற்போது சுமார் 8 லட்சம் சிம்கார்டுகள் தேவைப்படும் நிலையில் ஒரு லட்சம் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மத்திய- மாநில அரசு நிர்வாகங்களிடம் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின்மத்திய, மாநில நிர்வாகிகள்வலியுறுத்திய பிறகும் தேவையான சிம் கார்டு கள் வழங்கப்படவில்லை.இந்நிலையில் சிம் கார்டுகள் வழங்கப் படாததைக் கண்டித்தும், நிர்வாகம் உடனடியாக சிம்கார்டுகள் வழங்கக்கோரி யும், பிஎஸ்என்எல் நிறுவ னத்தை நலிவடையச் செய்து தனியார் நிறுவனங்களுக்கு உதவும்நோக்கத்துடன் செயல் படும் மத்திய அரசைக் கண்டித்தும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில்நாகர்கோவில் பிஎஸ் என்எல் பவன் முன்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் கே.கங்காதரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஜார்ஜ்பேசினார். மாவட்டப் பொருளாளர் பா.ராஜூஉட்பட திரளான ஊழியர் கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

சிம்கார்டு தயாரிப்பு ஒப்பந்தத்தை தாமதம் செய்வதா?
தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 13 -



சிம்கார்டு தயாரிப்புக் கான ஒப்பந்தம் விடுவதில், காலதாமதம் செய்யப் படுவதைக் கண்டித்து, தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் செவ் வாய்க்கிழமையன்று புதுக் கோட்டையில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.செல்போன், இணைய தளம் போன்ற செயல் பாடுகளுக்கு பிஎ°என் எல் சார்பில் சிம்கார்டு கள் விற்பனை செய்யப்படு கின்றன. இந்நிலையில் தொலைத் தொடர்பு வட்டங்களின் தேவைக் கேற்ப- கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக சிம்கார் டுகள் ஒதுக்கீடு செய்யப் படவில்லை. இதனால், சுமார் 80 ஆயிரம் வாடிக்கை யாளர்களுக்கு சிம்கார்டு களை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது பிஎ°என்எல் நிறுவனத் தை முடக்கும் செயல்பாடு களில் ஒன்றாகப் பார்க்கப் படுகிறது.எனவே, இதைக் கண்டித்து, புதுக்கோட்டை தொலைத்தொடர்பு அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் கே.நடராஜன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செய லாளர் எம்.மல்லிகா, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.கல்லடியான், கிளைச் செயலாளர் எம்.பால சுமாரன் உள்ளிட்டோர் பேசினர்.

மதுரை


பிஎஸ்என்எல் சிம்கார்டு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதுரை, தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் உடனடியாக சிம்கார்டு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்,ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொதுத்துறையான பிஎஸ்என்எல்லில் தமிழ்நாடு கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் கடந்த ஒரு மாத காலமாக சிம்கார்டு வினியோகம் நடைபெறவில்லை. இதுவரை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் நான்கு முறை கடிதம் எழுதியும் இதுவரை நிர்வாகம் சிம்கார்டுகளை வழங்கவில்லை. இதனைக் கண்டித்தும், பொங்கல் பண்டிகைக்கு முன்பணம் வழங்காததைக் கண்டித்தும், ஜிபிஎப்உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பீபீகுளத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சி.செல்வின் சத்தியராஜ், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமாவட்டத்தலைவர் கே.வீரபத்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் என்.சோனைமுத்து ஆகியோர் பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.மாயாண்டி நன்றி கூறினார். மதுரை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி திண்டுக்கல்,பழனி, தேனி, கம்பம் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி \

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக