தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

திங்கள், 29 டிசம்பர், 2014

வோடாபோனுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகை றசொந்தக் கம்பெனிக்கு எந்த உதவியும் இல்லை

பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்கும் மோடி அரசு
புதுதில்லி, ஜன. 4 -

பிஎஸ்என்எல் நிறுவனத்தை புதுப்பிக்கக்கோரி நாடு முழுவதும் அனைத்து மாவட் டங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித் துள்ளது.தில்லியில் பிஎஸ்என்எல் சங்கங்களின் சம்மேளனத்தின் அமைப்பாளர் வி.ஏ.என். நம்பூதிரி கூறியதாவது:பிஎஸ்என்எல் நிறு வனத்தைப் புதுப்பிக்க அவசர நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். வாடிக்கை யாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை களை மேம்படுத்த வேண்டும்.
இதுகுறித்து அரசும் பிஎஸ்என்எல் நிர்வாக மும் எதிர்மறையான அணுகுமுறையையே மேற்கொள் கின்றன. மொபைல் வழித்தடங் கள், கேபிள்கள், மின்கம்பிகள், பிராட்பாண்ட் மோடம் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட பல கருவிகள் புதிய தொடர்புகள் வழங்கவும் மேம்பட்ட சேவையை வழங்கவும் தேவைப்படு கின்றன. இவற்றை அரசு உட னடியாக வழங்க வேண்டும்.தகவல்தொடர்புத்துறை அமைச்சர் பிஎஸ்என்எல் அலைக்கற்றைகளை சமர்ப்பித் ததற்காக கட்டணமாக 6000 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். இதேபோல நிலுவைத் தொகையாக யூஎஸ்ஓ நிதியிலிருந்து 1,250 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது.வோடபோன், நோக்கியா ஆகிய கம்பெனிகளுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசின் சொந்தக் கம்பெனியான பிஎஸ்என்எல்க்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை.பிஎஸ்என்எல்லின் மூன்று பதவிகளான சிஎம்டி, இயக்குநர்(நிதி) மற்றும் இயக்குநர் (மனிதவளம்) ஆகியவை பல மாதங்களாக நிரப்பப்படவில்லை. இதனால் அன்றாடச் செயல்பாடுகள் தாமதமாகின்றன.1,30,000 தொழிலாளர்கள் பழுதடைந்த தடங்களை சரி செய்வது, பராமரிப்பு ஆகிய பணிகளை பார்த்து வந்தனர்.
கடந்த 2000ல் இவர்கள் பதவி ஓய்வு பெற்றனர். ஆனால் அதற்கு பின்னர் இவர்களின் காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் குறித்து தொடர்புத்துறை அமைச்சர், பிஎஸ்என்எல் செய லாளர் டிஓடீ, டிஎம்டி ஆகியஅனைத்துத்துறை அதிகாரிகளி டமும் அனைத்து பிரச்சனைகள் குறித்து விரிவான மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனை கள் குறித்து பேசுவதற்கு ஊழி யர்களை அழைத்து ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலைமை களில் பிஎஸ்என்எல் சங்கங்களின் சம்மேளனம் வரும் ஜனவரி 6ம்தேதியிலிருந்து 8ம்தேதி வரை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளது.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மார்ச் 17ம்தேதியிலிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம், போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துக் கொள் கிறோம். (ஐஎன்என்)

சனி, 20 டிசம்பர், 2014

ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


 

ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 
 
 
 அவிநாசி, டிச.20-

பிஎஸ்என்எல் ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்துஅனைத்து சங்க பி.எஸ்.என்.எல் தொலைப்பேசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவிநாசியில் வெள்ளியன்று பிஎஸ்என்எல் கோவை மாவட்ட நிர்வாகத்தின், ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்தும்,குறிப்பாக ஒரு ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்தும், உடனடியாக ஊழியரின் பணியிடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைப்பேசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டிஇ மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவித் தலைவர்கள் கே.மாரிமுத்து, வி.வெங்கட் ராமன்,உதவிச் செயலாளர் சுப்பிரமணியம், என்எப்டிஇ மாநில உதவிச் செயலாளர் ராபர்ட்ஸ், மாவட்டத்தலைவர் ஸ்ரீதரன், எப்என்டிஓ மாவட்ட செயலாளர் சௌந்தரராஜன், சிஐடியுஅவிநாசி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட திராளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி
தீக்கதிர்
 

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மனுகொடுக்கும் போராட்டம்

TNTCWU கோவை மாவட்டம் VDR/278 


 தோழர்களே!

 நமது மாவட்டத்தில் S.C.சபரிநாதன் மற்றும் INNOVITE SECURITY மற்றும் BALAJI ENTERPRICES ஒப்பந்ததாரர்களிடம் செப்டம்பர்-2014 & அக்டோபர்-2014 ஊதிய நிலுவையை பெற்றுத்தர 16.12.2014 (செவ்வாய்) அன்று தோழர்கள்:K.C  BSNLEU மாவட்ட தலைவர்,  C.ராஜேந்திரன் BSNLEU மாவட்டசெயலர்,S.சுப்பிரமணியம் BSNLEU மாநில உதவிசெயலர் T.ரவிச்சந்திரன் TNTCWU மாவட்டசெயலர்,மகேஸ்வரன் BSNLEU மாவட்ட பொருளர், M.Pவடிவேல் உதவிசெயலர், S.சண்முகசுந்தரம் TNTCWU மாவட்ட உதவி தலைவர்,குமரேசன் மாவட்ட உதவி செயலர், குப்புசாமி கணபதி மற்றும் 80-க்கும் மேற்ப்பட்டதோழர்கள் நேரில் சென்று DGM (Admin) அவர்களை சந்தித்து மனுகொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட DGM (Admin) அவர்கள் இரண்டு நாட்களில் ஊதியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிரச்சனை தொடர்ந்தால் அடுத்தகட்ட போராட்டங்களை தீவிரமாக்குவோம்.போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். “போராட்டம் ஒன்றே உரிமைகளை பெற்றுத்தரும்” 

                                                                                  தோழமையுடன்

 சி.ராஜேந்திரன்                                                                                                தி.ரவிச்சந்திரன் 
 மாவட்டசெயலர்                                                                                           மாவட்டசெயலர்
BSNLEU                                                                                                                TNTCWU

பிஎஸ்என்எல்-ஐ பாதுகாக்க ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம்

பிஎஸ்என்எல்-ஐ பாதுகாக்க ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம்
கே.தங்கவேல் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்
திருப்பூர், டிச.16-
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க கோரிஇந்தியா முழுவதும் ஒரு கோடிபொது மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் செவ்வாயன்று கையெழுத்துப் பெறும்இயக்கம் துவங்கியது. இதனைமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வுமான கே.தங்கவேல் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக என்எப்டிஇ தலைவர் அந்தோணி மரியபிரகாஷ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் அண்ணாதுரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு, தேவையான கைபேசி சேவை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும்.
4 ஜி சேவை வழங்கவும், மக்களுக்கு அளிக்கும் சேவையை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசுபோட்டு வரும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அனைத்து சங்க ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக எப்என்டிஓ செயலாளர் தனபதி நன்றி கூறினார்.இந்த இயக்கத்தின் நிறைவாக வரும் பிப்ரவரி மாதம் டில்லியில் மாபெரும் பேரணி நடத்தி,மக்கள் அளித்த கையெழுத்துக்களை மத்திய அரசிடம்பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்கள் சார்பாக வழங்கவுள்ளனர்.
நன்றி 
தீக்கதிர்

புதன், 10 டிசம்பர், 2014

கோவை மாவட்டம் திருப்பூர் ஆர்ப்பாட்டச் செய்தி பத்திக்கையில்

ஒப்பந்த தொழிலாளர்களின் மூன்று மாத கால சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம்
திருப்பூர், டிச. 10- திருப்பூரில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பாக புதனன்று பிஎஸ்என்எல் மைய அலுவலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் மைய அலுவலகத்தில் பணி புரியும் இரவு பணியாளர்கள்,
அலுவலக பணியாளர்கள் போன்று ஒப்பந்தத்தில் பணி செய்ய கூடிய பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத சம்பள தொகையை நிறுத்தி வைத்திருக்கும் சபரிநாதன் மற்றும் இன்னோவேட்டிவ் ஒப்பந்ததாரர்களை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாநில பொருளாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நன்றி
தீக்கதிர்

தினகரன் செய்தி
தினமணி

சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
÷ பி.எஸ்.என்.எல். மைய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் சங்க கிளைத் தலைவர் சாமியப்பன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ரமேஷ், மாவட்டத் தலைவர் முத்துக்குமார், மாநிலப் பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றும் இரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை, உடனடியாக வழங்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள்  பங்கேற்றனர்.

கோவை மாவட்டடத்தில் சம்பள பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம்

திருப்பூர் பகுதியில் இன்னொவெட்டிவ் ,சபரிநாதன் கான்ராக்க்டர்கள்  கீழ் பனீபுரியும் EOI, மற்றும் HOUSE KEEPPING -க்கான கடந்த இரண்டுமாத சம்பள பாக்கிக்காக திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சுமார் முப்பதுபேருக்கு மேல் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் திருப்பூர் DGM திரு ராமசாமி அவர்களை சந்தித்து முரையிட்டனர் அவரும் ஒப்பந்ததாரரை அழைத்து பேசினார்பின்பு இப் பிரச்சினைக்கு கண்டிப்பாக தீர்வு கனப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் ஆர்ப்பாட்ட்த்தில் BSNLEU தோழர்.சுப்பிரமனியம், தோழர் முகமதுஜாபர்,தோழர் விஸ்வநாதன் தோழர்.ஜோதிஸ், ஒப்பந்த உழியர் சங்கம் சார்பாக தோழர்.முத்துக்குமார், தோழர்.ரமேஷ், தோழர்.சாமியப்பன், தோழர்.சுந்தரக்கன்ணன் உள்ளீட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஒபந்த ஊழியரின் சம்பள பிரச்சினை மாதாமாதம் தொடர்கதையாகிவருவதை
தோழர் .சுப்பிரமணீயமும்,தோழர்.முகமதுஜாபர் மற்றூம் தோழர் விஸ்நாதன் உட்பட   திருப்பூர் DGM- மிடம் எடுத்துக்கூரியது சிராப்பம்சமாக இருந்தது
இதன் விழைவாக மாலையில் EOI - களுக்கு ஒரு மாதசம்பள்ம் கிடைத்தது! குறீப்பிடத்தகுந்தது .
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட சங்கம் பாராட்டுகின்ற்து .............!புதன், 3 டிசம்பர், 2014

கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதசம்பளத்திற்காக கோவை LEO -விடம் மனு

திருப்பூர்,பல்லடம் பகுதியில் EOI -க்கான கடந்த அக்டோபர் மாதசம்பளம் இதுவரை வழங்கப்பட வில்லை ,இதனைகண்டித்து BSNLEU கோவை மாவட்ட செயலர் திரு CR ,TNTCWU கோவை மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் திருப்பூர் தோழர் ரமேஷ் மற்றும் வடிவேல் ஆகியோர் தலைமையில் கோவை LEO திரு.தாமோதரன்அவர்களிடம் மனுகொடுக்கப்பட்டது   .  ஒப்பந்ததாரரின் தொடர்ந்த இந்தப்போக்கினை முற்றிலும் சரிசெய்யப்பட வேண்டும் நிர்வாகத்திற்கு ஒரு நெருக்கடியினை தரவேண்டும் உள்ளிட்ட பலவிசயங்களை திரு LEO அவர்களிடம் தோழர் CR ரும் தோழர் ரவியும் வலியுறுத்தினர்...LEO வும் வெகு வ்ரைவில் சம்பளத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.சம்பளம் வராமல்பாதிக்கப்பட்ட TNTCWU மாநில உதவிச்செயலர் உட்பட சுமார் 20 தோழர்கள் இதில் கலந்துகொண்டனர்   வெள்ளி, 14 நவம்பர், 2014

பஞ்சப்படி உயர்வை உடனே அமல்படுத்தக்கோரி கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் தர்ணாகோவை, நவ.14-
பஞ்சப்படி உயர்வை உடனே அமல்படுத்திடக்கோரி தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் கோவையிலுள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாதத்தின் முதல்வாரத்தில் சம்பளத்தை சம்பள சிலிப்புடன் வழங்க வேண்டும். உடனடியாக போனஸ் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும். இ-பாஸ்புக் முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இணைந்து கோவை மாவட்ட பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
.
இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட உதவி தலைவர் காந்தி, எஸ்.சுப்பிரமணியம், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் வி.பழனிசாமி ஆகியோர் தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிறைவாக ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கே. கருப்புசாமி நிறைவுரை ஆற்றினார். இப்போராட்டத்தில் ஏராளமான ஒப்பந்த தொழிலார்கள் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

புதன், 27 ஆகஸ்ட், 2014

கோவை மாவட்டம் திருப்பூர் பல்லடம் பகுதியில் EOI க்களுக்கான கடந்த மே மாத சம்பளம் வராமல் இருந்தது நமது மாவட்ட                                                     ச12ங்கத்தின் முயர்ச்சியாலும்  SDE (OP) அவர்களின் தலையீட்டாலும் இன்று (27/08/2014)  கிடைத்தது..........
15 பேர்களின் சம்பளம் கோவையில் திரு SDE(OP) அவர்களின் முன்னிலையில் ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்டது. நமது மாவட்ட செயலருக்கும் திரு LEO அவர்களுக்கும் நன்றி !!!!