பஞ்சப்படி உயர்வை உடனே அமல்படுத்தக்கோரி கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் தர்ணா
கோவை, நவ.14-
பஞ்சப்படி உயர்வை உடனே அமல்படுத்திடக்கோரி தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் கோவையிலுள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாதத்தின் முதல்வாரத்தில் சம்பளத்தை சம்பள சிலிப்புடன் வழங்க வேண்டும். உடனடியாக போனஸ் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும். இ-பாஸ்புக் முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இணைந்து கோவை மாவட்ட பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
.

இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட உதவி தலைவர் காந்தி, எஸ்.சுப்பிரமணியம், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் வி.பழனிசாமி ஆகியோர் தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிறைவாக ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கே. கருப்புசாமி நிறைவுரை ஆற்றினார். இப்போராட்டத்தில் ஏராளமான ஒப்பந்த தொழிலார்கள் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக