ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அவிநாசி, டிச.20-
பிஎஸ்என்எல்
ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்துஅனைத்து சங்க பி.எஸ்.என்.எல்
தொலைப்பேசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவிநாசியில்
வெள்ளியன்று பிஎஸ்என்எல் கோவை மாவட்ட நிர்வாகத்தின், ஊழியர் விரோதப்
போக்கைக் கண்டித்தும்,குறிப்பாக ஒரு ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததைக்
கண்டித்தும், உடனடியாக ஊழியரின் பணியிடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்
என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைப்பேசி ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டிஇ மாவட்ட
தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் என்.ராமகிருஷ்ணன் தலைமை
வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில உதவித் தலைவர்கள்
கே.மாரிமுத்து, வி.வெங்கட் ராமன்,உதவிச் செயலாளர் சுப்பிரமணியம்,
என்எப்டிஇ மாநில உதவிச் செயலாளர் ராபர்ட்ஸ், மாவட்டத்தலைவர் ஸ்ரீதரன்,
எப்என்டிஓ மாவட்ட செயலாளர் சௌந்தரராஜன், சிஐடியுஅவிநாசி செயலாளர்
ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட திராளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி
தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக