பிஎஸ்என்எல்-ஐ பாதுகாக்க ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம்
கே.தங்கவேல் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்
திருப்பூர், டிச.16-
கே.தங்கவேல் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்
திருப்பூர், டிச.16-
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க கோரிஇந்தியா முழுவதும் ஒரு கோடிபொது மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் செவ்வாயன்று கையெழுத்துப் பெறும்இயக்கம் துவங்கியது. இதனைமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வுமான கே.தங்கவேல் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக என்எப்டிஇ தலைவர் அந்தோணி மரியபிரகாஷ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் அண்ணாதுரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு, தேவையான கைபேசி சேவை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும்.
4 ஜி சேவை வழங்கவும், மக்களுக்கு அளிக்கும் சேவையை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசுபோட்டு வரும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் அனைத்து சங்க ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக எப்என்டிஓ செயலாளர் தனபதி நன்றி கூறினார்.இந்த இயக்கத்தின் நிறைவாக வரும் பிப்ரவரி மாதம் டில்லியில் மாபெரும் பேரணி நடத்தி,மக்கள் அளித்த கையெழுத்துக்களை மத்திய அரசிடம்பிஎஸ்என்எல் அனைத்து சங்கங்கள் சார்பாக வழங்கவுள்ளனர்.
நன்றி
தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக