ஒப்பந்த தொழிலாளர்களின் மூன்று மாத கால சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம்
திருப்பூர்,
டிச. 10- திருப்பூரில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று
மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும்
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பாக புதனன்று பிஎஸ்என்எல் மைய அலுவலகத்திற்கு
முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் மைய அலுவலகத்தில் பணி
புரியும் இரவு பணியாளர்கள்,
அலுவலக பணியாளர்கள் போன்று ஒப்பந்தத்தில் பணி செய்ய கூடிய பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத சம்பள தொகையை நிறுத்தி வைத்திருக்கும் சபரிநாதன் மற்றும் இன்னோவேட்டிவ் ஒப்பந்ததாரர்களை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளைத் தலைவர் சாமியப்பன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாநில பொருளாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நன்றி
தீக்கதிர்
தினகரன் செய்தி
தினமணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக