தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

திங்கள், 29 டிசம்பர், 2014

வோடாபோனுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகை றசொந்தக் கம்பெனிக்கு எந்த உதவியும் இல்லை





பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்கும் மோடி அரசு
புதுதில்லி, ஜன. 4 -

பிஎஸ்என்எல் நிறுவனத்தை புதுப்பிக்கக்கோரி நாடு முழுவதும் அனைத்து மாவட் டங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித் துள்ளது.தில்லியில் பிஎஸ்என்எல் சங்கங்களின் சம்மேளனத்தின் அமைப்பாளர் வி.ஏ.என். நம்பூதிரி கூறியதாவது:பிஎஸ்என்எல் நிறு வனத்தைப் புதுப்பிக்க அவசர நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். வாடிக்கை யாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை களை மேம்படுத்த வேண்டும்.
இதுகுறித்து அரசும் பிஎஸ்என்எல் நிர்வாக மும் எதிர்மறையான அணுகுமுறையையே மேற்கொள் கின்றன. மொபைல் வழித்தடங் கள், கேபிள்கள், மின்கம்பிகள், பிராட்பாண்ட் மோடம் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட பல கருவிகள் புதிய தொடர்புகள் வழங்கவும் மேம்பட்ட சேவையை வழங்கவும் தேவைப்படு கின்றன. இவற்றை அரசு உட னடியாக வழங்க வேண்டும்.தகவல்தொடர்புத்துறை அமைச்சர் பிஎஸ்என்எல் அலைக்கற்றைகளை சமர்ப்பித் ததற்காக கட்டணமாக 6000 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். இதேபோல நிலுவைத் தொகையாக யூஎஸ்ஓ நிதியிலிருந்து 1,250 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது.வோடபோன், நோக்கியா ஆகிய கம்பெனிகளுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசின் சொந்தக் கம்பெனியான பிஎஸ்என்எல்க்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை.பிஎஸ்என்எல்லின் மூன்று பதவிகளான சிஎம்டி, இயக்குநர்(நிதி) மற்றும் இயக்குநர் (மனிதவளம்) ஆகியவை பல மாதங்களாக நிரப்பப்படவில்லை. இதனால் அன்றாடச் செயல்பாடுகள் தாமதமாகின்றன.1,30,000 தொழிலாளர்கள் பழுதடைந்த தடங்களை சரி செய்வது, பராமரிப்பு ஆகிய பணிகளை பார்த்து வந்தனர்.
கடந்த 2000ல் இவர்கள் பதவி ஓய்வு பெற்றனர். ஆனால் அதற்கு பின்னர் இவர்களின் காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் குறித்து தொடர்புத்துறை அமைச்சர், பிஎஸ்என்எல் செய லாளர் டிஓடீ, டிஎம்டி ஆகியஅனைத்துத்துறை அதிகாரிகளி டமும் அனைத்து பிரச்சனைகள் குறித்து விரிவான மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனை கள் குறித்து பேசுவதற்கு ஊழி யர்களை அழைத்து ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலைமை களில் பிஎஸ்என்எல் சங்கங்களின் சம்மேளனம் வரும் ஜனவரி 6ம்தேதியிலிருந்து 8ம்தேதி வரை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளது.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மார்ச் 17ம்தேதியிலிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம், போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துக் கொள் கிறோம். (ஐஎன்என்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக