தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மனுகொடுக்கும் போராட்டம்

TNTCWU கோவை மாவட்டம் VDR/278 


 தோழர்களே!

 நமது மாவட்டத்தில் S.C.சபரிநாதன் மற்றும் INNOVITE SECURITY மற்றும் BALAJI ENTERPRICES ஒப்பந்ததாரர்களிடம் செப்டம்பர்-2014 & அக்டோபர்-2014 ஊதிய நிலுவையை பெற்றுத்தர 16.12.2014 (செவ்வாய்) அன்று தோழர்கள்:K.C  BSNLEU மாவட்ட தலைவர்,  C.ராஜேந்திரன் BSNLEU மாவட்டசெயலர்,S.சுப்பிரமணியம் BSNLEU மாநில உதவிசெயலர் T.ரவிச்சந்திரன் TNTCWU மாவட்டசெயலர்,மகேஸ்வரன் BSNLEU மாவட்ட பொருளர், M.Pவடிவேல் உதவிசெயலர், S.சண்முகசுந்தரம் TNTCWU மாவட்ட உதவி தலைவர்,குமரேசன் மாவட்ட உதவி செயலர், குப்புசாமி கணபதி மற்றும் 80-க்கும் மேற்ப்பட்டதோழர்கள் நேரில் சென்று DGM (Admin) அவர்களை சந்தித்து மனுகொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட DGM (Admin) அவர்கள் இரண்டு நாட்களில் ஊதியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிரச்சனை தொடர்ந்தால் அடுத்தகட்ட போராட்டங்களை தீவிரமாக்குவோம்.போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். “போராட்டம் ஒன்றே உரிமைகளை பெற்றுத்தரும்” 

                                                                                  தோழமையுடன்

 சி.ராஜேந்திரன்                                                                                                தி.ரவிச்சந்திரன் 
 மாவட்டசெயலர்                                                                                           மாவட்டசெயலர்
BSNLEU                                                                                                                TNTCWU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக