தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

புதன், 18 பிப்ரவரி, 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனே வழங்கிடுக


பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, பிப். 17-

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 4 மாதமாக வழங்கப்படாமல் நிலுவையுலுள்ள மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை உள்ளிட்ட 5 மையங்களில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதன் ஒருபகுதியாக கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி
தீக்கதிர்

மாவட்டம் தழுவிய தர்ணா

 மாவட்ட செயற்குழுவின் முடிவின் படி தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்காக 16-02-2015 அன்று கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய ஐந்து  மையங்களில்  மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது
கோவையில் மாவட்ட தலைவர் தோழர். கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலர். தோழர்.சி.ராஜேந்திரன், மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்,கிளைச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 உடுமலை பகுதியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு உடுமலை கிளைத்தலைவர் தோழர். ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட உதவிச்செயலர். தோழர். சக்திவேல், கிளைச்செயலர் தோழர். மணியன் மற்றும் முன்னனி தோழர்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சியில் மாவட்ட அமைப்புச்செயலர். தோழர் தங்கமணி மற்றும் கிளைச்செய்லர்கள். பிராபகரன், மனோகரன் மற்றும் தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்

திருப்பூரில் நடைபெற்ற தர்ணாவில் திருப்பூர் மெயின் கிளைத்தலைவர் தோழர். வாலீசன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச்செயலர். தோழர். முகமது ஜாபர் துவக்கயுரை ஆற்றினார்.மாவட்டஅமைப்புச்செயலர் தோழர். ராமசாமி நன்றி கூறி முடித்துவைத்தார். மாவட்ட சங்க நிர்வாகிகள், முருகசாமி, மகேஸ்வரன்,மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்

மேட்டுப்பளையம் பகுதியில் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜாராம் , கிளைச்செயலர் .சாஹீன்,  மற்றும் தோழர், தோழியர்கள் பங்கேற்றனர் .புகைப்படங்கள் கீழே 
நன்றி


திங்கள், 2 பிப்ரவரி, 2015

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மார்ச் 17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்


ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு முடிவு
 


சென்னை, பிப்.2-

பிஎஸ்என்எல் ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் “பிஎஸ்என்எல்-ஐ காப்போம் தேசத்தை காப்போம்’’ என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கம் நடைபெற்றது. சி.கே. மதிவாணன் (என்.எஃப்.டி.இ பொதுச்செயலாளர்) தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பி.அபிமன்யு (பி.என்.என்.எல்.இ.யூ பொதுச்செயலாளர்) சிறப்புரையாற்றினார்.
அவர்பேசும் போது திட்டமிட்டு பிஎன்என்எல்-ஐ அழிப்பதாக குற்றம்சாட்டினார். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக கொள்கைகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்காக கருவிகள் வாங்க போடப்பட்ட டெண்டர்களை அரசு ரத்து செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தில்லியில் பேரணி
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவும் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25ல் தலைநகர்தில்லியில் பேரணி நடத்தவும் முடிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார். பொதுச் சொத்தைபாதுகாக்கும் இந்த போராட்டங்களுக்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த கருத்தரங்கில் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
போராட்ட திட்டங்களை பகுதி வாரியாக ஊழியர்களிடம் கொண்டுசெல்லவும் பொதுமக்களிடம் விளக்கும் வகையில் பிரச்சாரம் செய்யவும் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றீ

தீக்கதிர்