மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் மார்ச் 24 அன்று மீஞ்சூ ரில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம் வல்லூர் அனல் மின் நிலையம் செட்டிநாடு கோல் டெர்மினல், சென்னை பெட்ரோ லியம் சாலிநேசன், ஐ.ஓ.சி, எச்.பி.சி, பேக்கண்டெயினர், சிகால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மீஞ்சூர் பகுதியில்உள்ளன. இவற்றில் கடந்த 10 ஆண்டுக ளுக்கு மேலாக குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரக்கணக் கானோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடி நீர் கிடையாது. கழிவறை இல்லை. தங்குவதற்கும் அறைகள் இல்லை.வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து கொத்தடிமைகள் போல்நடத்துகின்றனர். உயிருக்கு ஆபத்தான தொழில்களில் கூட ஒப்பந்த தொழிலாளர் களை பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த மோசமான நிலையை மத்திய மாநில அரசுகள் மாற்ற வேண்டும். ஒப்பந்த தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 15,000 வழங்கவேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், பி.எப், இ.எஸ்.ஐ. போன்ற சட்டச் சலுகை கள் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அத்திப்பட்டு புதுநகர் மேம்பாலத்திலிருந்து தொழிலாளர் கள் ஊர்வலமாக புறப்பட்டு மீஞ்சூர் அருகிலுள்ள பட்டமந்திரியில் கூடி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு மாவட்டத் துணைத் தலைவர் இ. ஜெய வேலு தலைமை தாங்கினார். இதில் தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் கே. விஜயன், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் கே. இராஜேந்திரன், பொது தொழிலாளர் சங்க பகுதி செயலாளர் ஜி. வினாயகமூர்த்தி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சுந்தரம், சலீல், நரேஷ், உமாசங்கர், சுதாகர் ஆகியோர் பேசினர். இதில் 500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தீக்கதிர்(சென்னை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக