தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

செவ்வாய், 30 ஜூலை, 2013

மாநாட்டு அறிக்கை


TNTCWU

கோவை மாவட்டம்

வெற்றிகரமான 5 வது மாநாடு          22/07/2013

அறிக்கை

 

அனைவருக்கும் தோழமை வணக்கங்கள் !

                        21 – 07 – 2013 அன்று 5 வது கோவை மாவட்ட மாநாடு மேட்டுப்பாளயத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது தோழர் N.P.ராஜேந்திரன் தலமை ஏற்க்க தோழர் ராஜப்பன் தேசியக்கொடி ஏற்ற  பல்லடம் தோழர் சண்முக சுந்தரம் சங்கக்கொடியை ஏற்றிவைத்தார்

எழிச்சிமிகு கோசங்களை தோழர் காந்தி முழக்கமிட்டார்.பீளமேடு தோழர் பி சம்பத் தியாகிகளுக்கு அஞ்சலி நிகழ்த்தினார்., தோழர்கள் முத்துகுமார்

மாவட்டசெயலர்,வடிவேலு வரவேற்புக்குழு செயலர் வரவேற்ப்புரை நிகழ்த்தினர்.

              மாநில செயலர் தோழர் முருகையா அவர்களின் நீண்ட துவக்க உரை அனைவரையும் கட்டிப்போட்டது ,ஒப்பந்த ஊழியர்களின் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் தெளிவான விடையாகவும் . விளக்கமாகவும் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

                மாநாட்டில் பங்கேற்ற இரண்டு சங்கங்களின் மாநில தலைவர்களுக்கு வரவேற்பு குழுத்தலைவர்கள் சால்வைஅணிவித்து கௌரவித்தனர்.

விரிவான அறிக்கையை மாவட்ட செயலர் முதுகுமார் முன்வைத்தார்,அதன்மீது 11 பிரதிநிதிகள் தங்கள் கருத்தினை முன்வைத்தனர்.பின்னர் மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலர் யு கே சிவஞானம் )சமூக நிகழ்வுகளை தீண்டாமை கொடுமைகளை பற்றி எழிச்சி உரையாற்றினார் அவரை தொடர்ந்து மேட்டுபாளயம் தாலுகா செயலர் பெருமாள் ,சி.ராஜேந்திரன்

DS BSNLEU,பாபுராதாகிஷ்ணன்,BSNLEU மாநில தலைவர் மாரிமுத்து,குன்னூர் மாவட்ட செயலர் வினோத் ஆகியோர் வாழ்த்தினர் .பின்னர் மீண்டும் தோழர் முருகையா விடுபட்ட விபரங்களை விளக்கினார்,வரவு செலவு கணக்கை மாவட்ட பொருளர் கருப்புசாமி முன்வைத்து பேசினார். கடைசியில் நன்றியுரையும் வழங்கினார். ஏகமனதாக புதிய நிர்வாகிகள்

தேர்வு செய்யப்பட்டனர்.7 கிளை களில் இருந்து வந்திருந்த 19 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன . சார்பாளர் பட்டியலை தோழர் சுந்தரக்கண்ணன் வாசித்தார்

மொத்த பிரதிநிதிகள்

மொத்தம் 196 பேர்

ஆண்கள்   143

பெண்கள்   53

கேபிள் -     45 கௌஸ்கீப்பிங் 135 அப்கீப்பிங் 16

 

புதிய நிர்வாகிகள்


தலைவர்          :  தோழர் M.முத்துக்குமார் திருப்பூர்

துணை தலைவர் :  தோழர் S.சண்முக சுந்தரம் பல்லடம்

                       தோழர் K.J.ராஜாமணி கோவை

                       தோழர் தர்மராஜ் பி பி புதூர்

                       தோழர் O.ராமச்சந்திரன் பொள்ளாச்சி

செயலர்            :  தோழர் T.ரவிச்சந்திரன் கோவை

 உதவி செயலர்   :   தோழர் C.ராஜேந்திரன்

                        தோழர் M.P.வடிவேல் மேட்டுப்பாளயம்

                        தோழர் P.விஜயன் உடுமலை

                        தோழர் N.குமரேசன் கோவை

பொருளாளர்       :  தோழர் K.கருப்புசாமி கோவை    

துணை பொருளர்    :  தோழர் செந்தில் குமார் கோவை

அமைப்பு செயலர்    :  தோழர் C.சம்பத் பீளமேடு

                                             : தோழர் R.குப்புசாமி கணபதி

                                                  தோழர் A.ரமேஷ் திருப்பூர்

                                                     தோழர் ஷோபனா கோவை

                                                     தோழர் அஸ்வின் ராஜா

                                                           தோழர் V.பழனிச்சாமி

                                                            தோழர் கல்யாணி கோவை

தணிக்கையாளர்         தோழர் R.R.மணி

 

 

 

மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்

தோழர் ராஜாராம், தோழர் வடிவேல் தோழர் ஜாகின் அகமது,மற்றும் தோழர் சந்திரசேகரன் தலைமையிலான வரவேற்ப்புக்குழு குறைவில்லாத ஏற்பாடுகள் நிறைவுடன் செய்திருந்தது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

விடுமுறை நாள் எனினும் 50 பெண் தோழியர்களுடம் 250 பேர் பங்கேற்றது சிறப்பாகும்.குறுகிய கால அவகாசம் எனினும் நிறைவான ஏற்பாட்டினை காணமுடிந்தது.மாநாட்டில் மாநில மாநாட்டு நன்கொடையாக ரூ.10000 வழங்கப்பட்டது BSNLEU வின் மாநில பொறுப்பாளர்கள் தோழர் மாரிமுத்து, தோழர் சுப்ரமணியம், தோழர் முகமதுஜாபர், தோழர் வெங்கட்ராமன் ,பாபுராதாகிருஷ்ணன்  , BSNLEU வின் மாவட்ட பொறுப்பாளர்கள்

K.சந்திரசேகரன்,P.செல்லத்துரை,V.சம்பத்,C.ராஜேந்திரன்,N.P.ராஜேந்திரன் P.முருகன்,M.காந்தி,M.சக்திவேல்,R.R.மணி,P.ராஜாரம்,M.முருகசாமி,N.ராமசாமி,

P.தங்கமணி, சதீஸ்நிசார் அகமது ஆகியோர் பங்கேற்றனர் TNTCWU மாநில பொறுப்பாளர்கள்

K.விஸ்வநாதன்,வினோத்,K.J.ராஜாமணி,I.S.சுந்தரக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடதக்கது.மாநாட்டில் TNTCWU கோவைமாவட்டத்திற்கென தனி வெப்சைட் தோழர் முருகையாவால் திரக்கப்பட்டது, வெப்சைட்டை  தோழர் சுந்தரக்கண்ணன் வடிவமைதிருந்தார் (www.tntcwucbt.blogspot.com)

நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1 மாதசம்பளம் ரூ 10,000 உத்திரவாதப்படுத்துவது

2 ESI கார்டு அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும்

3 ESI மருத்துவ மனை அல்லாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்து வமனை

  களில் சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும்

4 மாத மாதம் சம்பளசிலிப் வழங்கப்படவேண்டும்

5 மாதா மாதம் சம்பளம் முதல் வாரத்தில் 7ம் தேதிக்குள் வழங்கப்பட   வேண்டும்

6 EPF அக்கவுண்ட் எண் அனைவருக்கும் வழங்கப்படவேண்டும்

  காண்ட்ராக்டர் மாறினாலும் ஒப்பந்த ஊழியரின் EPF எண் தொடர்ச்சியாக        

  ஒரே எண்ணில் தொடரவேண்டும் ,EPF பேலன்ஸ் சீட் முறையாக வழங்கப்படவேண்டும்

7 மகளிர் ஒப்பந்த ஊழியர்களுக்கு சைல்டு கேர் லீவு வழங்கவேண்டும்

8 வார விடுமுறை சம்பளத்துடன் வழங்கவேண்டும்

9 கம்பியூட்டர்,எஞ்சின்,பிரிண்டர் உள்ளிட்ட இதர பழுதுகளுக்கு AMC ஒப்பந்தம்   வழங்காமல் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக பயிற்ச்சி கொடுத்து ஒப்பந்த உழியர்களை நியமிக்க வேண்டும்

10 கோவை மாவட்டத்தில் காலியாகௌள்ள BSNL குடியிருப்புகளை ஒப்பந்த    ஊழியர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கவேண்டும்

11 மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஊழியர் பற்றாக்குறையை நீக்க அனைத்து

ஒப்பந்த ஊழியருக்கும் 8 மணிநேர பணி வழங்கப்பட வேண்டும்

12 ஒப்பந்த ஊழியர்களுக்கு பிற மாவட்டங்களில் வழங்கப்படுவது போல

   போனஸ் வழங்க வேண்டும்

13 ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை நிர்வாகமே வழங்க     வேண்டும்

14 கேபிள் பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஸ்கில்டு பகுதி என கருதி அதற்க்கான சம்பளம்  வழங்கப்பட வேண்டும்

15 ஒப்பந்த ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படவேண்டும்

16 மாற்றுத்தினாளி ஒப்பந்த ஊழியர்களுக்கு மருத்துவ அடிப்படயில் சலுகைகள் வழங்கவேண்டும்

17 6 மாத டெண்டர் முறையை 1 வருடம் என் மாற்றவேண்டும்

18 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கால தாமதம் செய்யும் காண்ட்ராக்டர் கள்மேல் நிர்வாகமே நடவடிக்கை எடுக்கவேண்டும்

19 கோர்ட் வழக்கில் உள்ளவர்கள் அடிப்படையில் சீனியார்ட்டி பின்பற்ற பட

   வேண்டும்,கோர்ட் வழக்கும் உடனடியாக நடத்தி முடிக்கப்படவேண்டும்

முன்மொழிபவர் K.சந்திரசேகரன்                வழிமொழிபவர் T.ரவிசந்திரன்

                                                                                                          புரட்சிகர வாழ்த்துக்களுடன்

                                        

                                                                                                                             T.ரவிசந்திரன்

                                                                                                                         மாவட்ட செயலர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக