கோவை, ஆக. 7- தொழிற்சங்க ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்களின் கூட்டுக்கமிட்டி சார்பில்கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கடந்த ஜூலை மாதம்டெல்லியில் கூட்டுக்கமிட்டியுடன் நிர்வாகம்நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, அதன்குறிப்பேட்டில் தொழிற்சங்க ஒற்றுமையை குலைக்கிற வகையிலும், கூட்டுக்கமிட்டியின் செயல்முறையை தவறுதலாக விமர்சித்து எழுதப்பட்டிருப்பதை கண்டித்தும் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தலைமை தொலைபேசி நிலையம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டுக்கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டியின் மாநில நிர்வாகி சுப்புராயன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர்சங்கத்தின் மாநிலத்தலைவர் மாரிமுத்து, மாவட்டசெயலாளர் சி.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதிய தேக்கம், ஊதிய குறைப்பு பிரச்சனை,கருணை அடிப்படையிலான பணி நியமனம் மற்றும் தொழிற்சங்க ஒற்றுமையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
கோவை சாய்பாபாகாலனி தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டிஇ கிளைச்செயலாளர் ஆர்.பேரின்பராஜ் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர்கள் கிளை செயலாளர் என்.அன்பழகன் தொடங்கிவைத்தார். பிஎஸ்என்எல்இயு மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன்,என்எப்டிஇ மாவட்டச்செயலாளர் என்.ராமகிருஷ்ணன், பிஎஸ்என்எல்இயு. மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இறுதியில் பிஎஸ்என்எல்இயு கிளை பொருளாளர் வி.கருணாகரன் நன்றி கூறினார். இதில் ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குன்னூர்
ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து பிஎஸ்என்எல், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குன்னூர் மார்கெட்டிங் எஸ்.டி.இ யின் தன்னிச்சையான போக்கினை கண்டித்தும், எஸ்.ஏ.ஸ் யில் ஒப்பந்த ஊழியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்’. இரு மாதங்களுக்கொருமுறை ஜேசிஎம் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் ஜேக்கப் மேரிஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சதாசிவம், மாநில உதவி செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக