140 ஒப்பந்த தொழிலாளர் பணிநீக்கத்தை கண்டித்து திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஆக.5-வேலூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 140 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தியும் திருப்பூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் இணைந்து மாநில அளவில் நடத்திய இயக்கத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை திருப்பூர் பி.பி.புதூர் தொலைபேசி நிலையம் முன்பாக இந்தஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க தலைவர் சாமியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் முகமதுஜாபர், கிளைச் செயலாளர் அண்ணாதுரை, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரமேஷ்ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப்பொருளாளர் விஸ்வநாதன் நிறைவுரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக