தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்! ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்!என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 இந்த சங்க நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதே இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும் (EDITED & COMPILED BY-------*******---- சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் (BSNL ஒப்பந்த ஊழியர்)944 2352000 ) --
<==============================================================================================================>
TNTCWU " செய்திகள் " வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றோம்
<===============================================================================================================>

வியாழன், 24 ஜூலை, 2014

புதிய கிளை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்


ஓப்பந்த ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சமூக அக்கறையுடன் செயல்படும் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் பல்லடம் கிளையை  தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் மாவட்ட சங்கம் வாழ்த்துகின்றது
   24--07-2014 அன்று நடந்த  பல்லடம் கிளைமாநாட்டில்  பல்லடம்  கிளைக்கு தோழர் ஸ்ரீரங்கன், அவர்கள் கிளைத்தலைவராகவும், தோழர்.என். நாகராஜன் கிளைச்செயலராகவும், தோழர்.இருசப்பன்,  கிளைப்பொருளாளராகவும்  ,  தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மாநிலசங்க நிர்வாகிகள் கே. மாரிமுத்து, எஸ்.சுப்பிரமணியம், முகமதுஜாபர்,மாவட்டச்செயலர். தோழர்.சி.ராஜேந்திரன்,  மாவட்டச்சங்க நிர்வாகிகள் கே.சந்திரசேகரன்,என்.ராமசாமி,எம்.சதிஸ்,எம்.காந்தி,எம்.முருகசாமி, P. செல்லதுரை மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டசெயலர். தோழர்.ரவிச்சந்திரன், மாநிலப்பொருளாளர். விஸ்வநாதன்,மாவட்டசங்க நிர்வாகி தோழர்.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு  புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்


திங்கள், 21 ஜூலை, 2014

7 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரைவார்ப்பு



புதுதில்லி, ஜூலை 18-நாட்டின் இலாபகரமாக இயங்கிவரும் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) இந்திய இரும்பு தொழிற்சாலை (செப்ல்) இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உள்ளிட்டு 7 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்திடும் திட்டத்தை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
முந்தைய பாஜக அரசின் கீழ் அமைச்சர் அருண்சோரி தலைமையிலான பொதுத்துறை கலைப்புத்துறை செயல்பட்டது. அதேபோன்றே, நரேந்திர மோடிதலைமையிலான பாஜக அரசிலும் பொதுத்துறைகளை கலைத்து தனியார்மயமாக்குவதற்கான துறை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொதுத்துறை கலைப்புத்துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கூறப்படும் நிறுவனங்களாவன:
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் (ஓ.என்.ஜி.சி) ஸ்டீல்அத்தாரிட்டி ஆப் இந்தியா (செப்ல்) இந்திய நிலக்கரி நிறுவனம் (சி.ஐ.எல்),இந்துஸ்தான் ஏரோநாட் டிக்ஸ் லிமிடெட், பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் (பி.எப்.சி) நேஷனல் ஹைடிரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேசன் (என்.எச். பி.சி) போன்ற நிறுவனங்களாகும். இவை இலாபகரமாக இயங்கி வருபவை.மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பின்னர், இன்னும் 3 மாதங்களுக்குள் தனியார்மயமாக்க திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நிதித்துறை அமைச்சக தகவல் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
       நன்றி..
தீக்கதிர் நாள்:21.07.2014

மைக்ரோசாப்டில் ஆட் குறைப்பு 18000 ஊழியர் வெளியேற்றம்

யூயார்க், ஜூலை 18-iக்ரோசாப்ட் கம்பெனிக்கு தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற அமெரிக்க வாழ் இந்தியர் சத்தியா நடேலா முதல் வேலையாக கம்பெனியின் இலாபத்தை கூட்டுவதற்காக 18000 பேரை வெளியேற்றிவுள்ளார். உலக அளவில் கம்பெனியின் உற்பத்தி திறனை அதிகரித்து இலாபத்தை கூட்டுவதற்காக இப்பிரம்மாண்டமான ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மைக்ரோசாப்ட், நோக்கியா மொபைல் கம்பெனியுடன் இணைந்து மொபைல்உற்பத்தியில் ஈடுபடுவதை யொட்டி முதல் கட்டமாக 12,500 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. கடந்த 2013 ஜூன் மாதம் வரை மைக்ரோசாப்ட் கம்பெனியில் முழுநேர ஊழியர் எண்ணிக்கை 99,000 பேராக இருந்தது. இதில் அமெரிக்காவில் மட்டும் 58,000 பேரும் உலகளவில் 41,000பேரும் பணிபுரிந்து வந்தனர்.நடப்பு ஆண்டின் துவக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவின் மொபைல் கருவி தயாரிக்கும் கம்பெனியை 7.2 பில் லியன்(100கோடி) விலைக்கு வாங்கியது. இதன் பின்னரே நடேலா ஊழியர்களுக்கு ஆட் குறைப்பு தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் கருவிகளின் உற்பத்தியை அதிகரித்து இலாபத்தை கூட்டுவதற்காக ஊழியர் எண்ணிக்கையில் 18000 பேரை ஆட் குறைப்பு செய்யப்போவதாக குறிப்பிட்டுள் ளார்.
நன்றி
தீக்கதிர்:21.07.2014

வியாழன், 17 ஜூலை, 2014

போராட்டமும் , தீர்வும்

     BSNLEU  மற்றும் TNTCWU கோவை மாவட்ட சங்கங்கள் நிலுவையில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்காக 17-07-2014 அன்று மாவட்ட அளவில் தர்ணா போராட்டத்திற்கு  அறைகூவல் விடுத்து இருந்தன. 11-07-2014 அன்று நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவர்த்தை மற்றும் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை 16-07-2014 அன்று நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆழமாக பரிசிலித்தது. இந்த பின்னனியில் 17-07-2014 அன்று நடைபெற இருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்காக போராட்டங்களை ஒப்பந்த ஊழியர் சங்கத்தோடு இணைந்து தொடர்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே நாளில் கோவையில் கூடிய ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  சம்பள நிலுவை , ESI, PF  பிரச்சனைகளுக்காக 21-07-2014 அன்று  கருப்புப்படை அணிவது எனவும்,  25-07-2014 அன்று மாவட்டம் முழுவதும் கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் , தீர்மானித்துள்ளது. அதன்படி இரண்டு சங்கங்களும் இணைந்து இவ்விரு இயக்கங்களையும் மாபெரும் வெற்றியடையச்செய்ய வேண்டுகிறோம் .
அடுத்த கட்ட போராட்டம் பற்றி மாநில சங்கங்களுடன் கலந்து பேசி தீர்மானிப்பது  எனவும் முடிவெடுக்கப்பட்டுளது. இதுபற்றி விரிவான அறிக்கை ,  BSNL EU அறிக்கை எண் 81 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது 
                                          மாவட்ட செயலர்.
                                           தி.ரவிச்சந்திரன்

புதன், 16 ஜூலை, 2014

TNTCWU கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

  தோழர்களே!
                        நமது கோவை மாட்ட நிர்வாகிகள் கூட்டம் தோழர்: O.ராமச்சந்திரன் மாவட்ட உதவி தலைவர் தலைமையில் 16-07-2014 அன்று மாலை 04.30.மணிக்கு கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.
  பொருள்:   1. மாநில செயற்குழு முடிவுகள்
                        2.இயக்கங்கள்
                        3.BSNLEU மாவட்ட, மாநில மாநாடு பங்கேற்பு சம்மந்தமாக
மேலும் மாநில செயற்குழு முடிவுகள் மற்றும் நடக்ககூடிய இயக்கங்களை  விரிவாக தோழர்:ரவிச்சந்திரன் மாவட்ட செயலர் விளக்கவுரையாற்றினார்.
10.மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
                          
திட்டமிடபட்ட இயக்கங்கள்

1.    17-07-2014  நிர்வாகத்துடன் நடந்த பேசுவார்தையின்  அடிப்படையில்
                            தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2.     21-07-2014 கருப்பு பேட்ச் அணிந்து பணிசெய்வது.
3.     25-07-2014 கோரிக்கைகளை வலியுறித்தி பெருந்திரள் ஆர்பாட்டம்
                            நடத்துவது.
               

ஞாயிறு, 6 ஜூலை, 2014

ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 4 -








திருப்பூர்



பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தேங்கிக்கிடக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வலியுறுத்திபிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

மருத்துவ சேவை அட்டைகள் தருவதில்லை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை இல்லாத மாவட்டங்களில் மருத்துவ வசதி பெறுவதில் உள்ளசிரமங்களைக் களைய வேண்டும், ஊழியர் மற்றும் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளைநிறைவேற்ற உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்உள்ளிட்ட நெடுநாள் தீர்க்கப்படாத கோரிக்கைகள், பிரச்சனைகளை விரைந்து தீர்த்திட வலியுறுத்தி மாநில அளவில் வெள்ளியன்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்புஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
இதன்ஒரு பகுதியாக, திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக பிற்பகல் உணவு இடைவேளையில் நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்துக்குபிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர் வாலீசன் தலைமைவகித்தார். இதில் தமிழ்நாடுதொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சி.வினோத்குமார் சிறப்புரைஆற்றினார். பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் முகமது ஜாபர் கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினார். இதில் நிறுவன ஊழியர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் திரளானனோர் கலந்து கொண்டனர்.

பல்லடம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொலைப்பேசி நிலையம் முன்பாக நடைபெற்றஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி செல்வராஜ் மற்றும் வீரேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மேலும்,வெள்ளிங்கிரி, காந்தி, சண்முகசுந்திரம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாகராதாகிருஷ்னன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 பெண்கள் உட்பட30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
கோவை
கோவை சாய்பாபா காலனிதொலைப்பேசி நிலையம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை நிர்வாகிகள் என்.அன்பழகன், சுந்தரராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் கே.சந்திரசேகரன், மாவட்டஅமைப்புச் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிறைவாக வி. கருணாகரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.