யூயார்க்,
ஜூலை 18-iக்ரோசாப்ட் கம்பெனிக்கு தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற அமெரிக்க
வாழ் இந்தியர் சத்தியா நடேலா முதல் வேலையாக கம்பெனியின் இலாபத்தை
கூட்டுவதற்காக 18000 பேரை வெளியேற்றிவுள்ளார். உலக அளவில் கம்பெனியின்
உற்பத்தி திறனை அதிகரித்து இலாபத்தை கூட்டுவதற்காக இப்பிரம்மாண்டமான ஆட்
குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மைக்ரோசாப்ட், நோக்கியா
மொபைல் கம்பெனியுடன் இணைந்து மொபைல்உற்பத்தியில் ஈடுபடுவதை யொட்டி முதல்
கட்டமாக 12,500 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. கடந்த 2013 ஜூன்
மாதம் வரை மைக்ரோசாப்ட் கம்பெனியில் முழுநேர ஊழியர் எண்ணிக்கை 99,000 பேராக
இருந்தது. இதில் அமெரிக்காவில் மட்டும் 58,000 பேரும் உலகளவில்
41,000பேரும் பணிபுரிந்து வந்தனர்.நடப்பு ஆண்டின் துவக்கத்தில்,
மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவின் மொபைல் கருவி தயாரிக்கும் கம்பெனியை
7.2 பில் லியன்(100கோடி) விலைக்கு வாங்கியது. இதன் பின்னரே நடேலா
ஊழியர்களுக்கு ஆட் குறைப்பு தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில் கருவிகளின் உற்பத்தியை அதிகரித்து இலாபத்தை கூட்டுவதற்காக
ஊழியர் எண்ணிக்கையில் 18000 பேரை ஆட் குறைப்பு செய்யப்போவதாக
குறிப்பிட்டுள் ளார்.
நன்றி
தீக்கதிர்:21.07.2014
நன்றி
தீக்கதிர்:21.07.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக