BSNLEU மற்றும் TNTCWU கோவை
மாவட்ட சங்கங்கள் நிலுவையில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்காக 17-07-2014
அன்று மாவட்ட அளவில் தர்ணா போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து இருந்தன. 11-07-2014 அன்று
நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவர்த்தை மற்றும் அமலாக்கத்தில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை 16-07-2014 அன்று நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
ஆழமாக பரிசிலித்தது. இந்த பின்னனியில் 17-07-2014 அன்று நடைபெற இருந்த தர்ணா
போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஒப்பந்த
ஊழியர் பிரச்சனைகளுக்காக போராட்டங்களை ஒப்பந்த ஊழியர் சங்கத்தோடு இணைந்து தொடர்வது
எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே நாளில் கோவையில் கூடிய ஒப்பந்த ஊழியர்
சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
சம்பள நிலுவை , ESI, PF பிரச்சனைகளுக்காக 21-07-2014 அன்று கருப்புப்படை அணிவது எனவும், 25-07-2014 அன்று மாவட்டம் முழுவதும் கிளைகளில்
ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் , தீர்மானித்துள்ளது. அதன்படி இரண்டு சங்கங்களும்
இணைந்து இவ்விரு இயக்கங்களையும் மாபெரும் வெற்றியடையச்செய்ய வேண்டுகிறோம் .
அடுத்த
கட்ட போராட்டம் பற்றி மாநில சங்கங்களுடன் கலந்து பேசி தீர்மானிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுளது. இதுபற்றி
விரிவான அறிக்கை , BSNL EU அறிக்கை எண் 81 ல்
தெரிவிக்கப்பட்டுள்ளது
மாவட்ட செயலர்.
தி.ரவிச்சந்திரன்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக